சோழர் கால கல்வெட்டு
சோழர் கால கல்வெட்டு - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு . கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள சந்தவேளிப்பேட்டை , பாச்சாரப்பாளையம் , கீழூர் போன்ற ஊர்களில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வரலாற்றுத்துறையை சார்ந்த தொல்லியல் ஆய்வாளரும் பேராசிரியருமான சிவராமகிருஷ்ணன் தலைமையில் அத்துறையை சார்ந்த மாணவர்கள் சுசிந்திரன் , ராஜராஜன் , பிரபாகரன் , பாலாஜி ஆகியோர் கடந்த ஐந்து நாட்களாக களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் இப்பகுதியில் பல வரலாற்றுச் சான்றுகளை கண்டறிந்துள்ளனர். சோழர்காலத்தியக் கல்வெட்டு கீழூர் கிராமத்தில் வாழ்ந்து வரும் பாச்சாரப்பளையத்தை சார்ந்த பளையக்கரர்களின் இடிந்த அரண்மனை பகுதி , அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏரிகள் , குளங்கள் , கிணறுகள் போன்ற இடங்களில் ஆய்வுகள் ...