கீழடி
பூம்புகாரைப் போன்று - கீழடி அகழாய்வு பகுதியை திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமம் வைகை நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் மதுரையில் இருந்து கிழக்கே சுமார் 20 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு கடந்த ஆறு மாதங்களாக இந்திய தொல்லியல் துறையின் பெங்களுரு மண்டலம் சார்பில் மிகப்பெரிய அகழாய்வு நடைபெற்று வருகிறது . இதுவரை தமிழகத்தில் நடைபெற்றுள்ள அகழாய்வுகளில் இதுதான் மிகப்பெரிய அகழாய்வாகும். இங்கு 40 திற்கும் மேற்பட்ட அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு மிக விரிவான அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்திய தொல்லியல் துறையின் பெங்களுரு மண்டல இயக்குநர் திரு அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். தொல்பொருட்கள் சங்ககாலத்தை சார்ந்த தமிழ் மக்களின் தொல் எச்சங்கள் அதிக எண்ணிக்கையில் கீழடி அகழாய்வு மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது தமிழக வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இத...