தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆத்தூர் தி. வை . சதாசிவ பண்டாரத்தார் ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டு மக்களின் தாய்மொழியில் வெளி யிடப்பட்டால்தான் அந்நாட்டு மக்கள் அவற்றை ஆர்வத்துடன் படித்துணர முடியும். இதனையே அடிப்படை காரணமாக கொண்டு தமிழகத்தில் தோன் றிய பல தமிழ் அறிஞர்கள் தமிழர் வரலாறு , பண்பாட்டு , கலாச்சாரம் , சமூககட்டமைப்புகள் , உலக மக்களுடன் கொண்டிருந்த வர்த்தக உறவு , பண்டையகால மன்னர்கள் கப்பற்படை வலிமையால் கிழக்காசிய நாடுகளை தமது ஏகதிபத்தியத்தின் கீழ் வைத்திருந்தது போன்ற தமிழர் பெருமைகளை சுதந்திரதிற்கு முன்பிருந்தே எழுதி வந்ததனர். அவைகளை படித்த தமிழர்கள் எங்கிருந்தோ வந்த அன்னியர்கள் நம்மை ஆள்வதா என்ற உணர்வு மக்களி டையே காட்டுத்தீ போல பரவகாரணமாக இருந்தது. அதோடு மட்டுமன்றி இந்திய சுதந்திர போராட்ட கலத்தில் தமிழர்கள் உத்வேகத்துடன் குதிப் பதற்கும் காரணமாக அமைந்தது. சுதந்திரக்கு முன்பும் பிறகும் ஏராளமான தமிழ் நூல்க...