சீறாப்புராணம் அரங்கேற்றம்
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் உதவிப்பேராசிரியர் வரலாற்றுத்துறை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி தஞ்சாவூர் பரங்கிப்பேட்டையில் சீறாப்புராணம் அரங்கேற்றம் பரங்கிப்பேட்டையில் பிறந்த வள்ளல் அபுல்காசிம் மரைக்காயர் அவர்கள் வள்ளலசீதக்காதியின் மறைவிற்குப் பின்னர் உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்ஆவர்.இவரது பெயர் ஹுசைன் நயினார் என்பதாகும். வள்ளல் சீதக்காதியின் ஆதரவால்உமறுப் புலவர் சீறாப்புராணத்தை எழுதி வந்தார். இது அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் காப்பியமாகும். நூல் முழுமையடையும் முன்னரே வள்ளல் சீதக்காதி மறைந்தார். அதன்பின் ஆதரிப்பார்யாரும் இல்லாத உமறுப்புலவர் வருந்தி நின்றார். இதை அறிந்த பரங்கிப்பேட்டையின் வள்ளல் அபுல்காசிம் மரைக்காயர் தாம் ஆதரவு தருவதாகவும் சீறாப்புராண காப்பியத்தை பாடி முடிக்கும் படியும் வேண்டினார். இவரின் கொடையால் உமறுப்புலவர் சீறாப்புராணக் காப்பியத்தை தொடர்ந்து எழுதலானார். அபுல்காசிம் மரைக்காயரின் பேருதவியால் முறைப்படி சீறப்புராணத்தை பரங்கிபேட்டையில் தங்கி முடித்தார்....