வரலாற்றில் விழிஞம் – பண்டைய துறைமுக நகரத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்
வரலாற்றில் விழிஞம் – பண்டைய துறைமுக நகரத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும். நன்றி கட்டுரை ஆசிரியர் திரு இரா.முத்துசாமி அவர்களுக்கு (நவம்பர் 16, 2020 ) முன்னுரை விழிஞம் ( Malayalam: വിഴിഞ്ഞം) , அரபிக் கடற்கரையில் , கலங்கரை விளக்கமும் இயற்கைத் துறைமுகமும் கொண்ட ஒரு சிறிய மீன்பிடி கிராமம் ஆகும். பிரபல சுற்றுலாத் தலமான கோவளம் கடற்கரை அருகே விழிஞம் அமைந்துள்ளது. வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழிஞம் துறைமுகம் கிழக்கு மேற்கு வணிக வழி யின் முக்கியமான இடத்தில் அமைந்திருந்தது. இடைக்காலத் தமிழ் கல்வெட்டு , விழி ஞத்தை மலைநாட்டின் தலைநகராகக் குறிப்பிடுகிறது , மேலும் இவ்வூர் விலின்டா ( Vilinda), விலினம் ( Vilinam) அல்லது விலூனம் ( Vilunum) என்றெல்லாம் அழைக்கப்பட்டது. சோழர்கள் இவ்வூரைக் கைப்பற்றியதும் , இராஜேந்திர சோழபட்டினம் என்றும் குலோத் துங்க சோழபட்டினம் என்றும் பெயர் மாற்றம் செய்தனர். இந்த நகரத்தைக் கைப்பற்று வதற்காகவே , கி.பி. 8 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே , ஆய் , சேரர் , பாண்டி யர...