Posts

Showing posts from January, 2016

திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் கோயில்

Image
      திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் கோயில்  வரலாறு முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன், பேராசிரியர்      வரலாற்றுத்துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம். கோயில் அமைவிடம்      கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் திருச்சோபுரம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஊர் அமைந்துள்ளது. இவ்வூரின் நடு நாயகமாக மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு       கி.பி. 1070 முதல் 1120 வரை கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழனின் பட்டத்தரசிகளுள் ஒருவராகிய தியாகவல்லி அம்மையாரால் திருப்பணி செய்யப்பட்ட பெருமைக்குரியது இக்கோயில். சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஏரளாமான நிலதானங்களை மங்களபுரீஸ்வரர் கோயிலுக்கு வழங்கியுள்ளதை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் இக்கோயில் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. இறைவன் – இறைவி      மூலவர் – மங்களபுரீஸ்வரர்  என்ற சோபுரநாதர் . இம் மூலவர் சுயம்புவாக காட்சியளிக்கிறார்      இறைவி – வேல்நெடுங்கண்

திருத்தினை நகர்

Image
தமிழ் இந்து - வில் . திருத்தினை நகர்  என்கிற  தீர்த்தனகிரி.......முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன்.