Posts

Showing posts from November, 2017

கங்கைகொண்ட சோழபுரம்

Image
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் உறை கிணறு முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் , உதவிப்பேராசிரியர் , வரலாற்றுத்துறை , அரசு கலைக் கல்லூரி - ஆத்தூர் .         அரியலூர் மாவட்டம் உடையார்குடி வட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பாண்டியன் என்பவர் தமது நிலத்தை சீர் செய்யும் பொழுது திடீர் என மேல்மண் உள் வாங்கியது. அப்பள்ளத்தில் வட்டவடி விலான உறைகள் காணப்பட்டன . உடனே கங்கை கொண்ட சோழபுர அருங்காட்சிய காப்பாட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காப்பாட்சியர் பிரபாகரன் , கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியக மேம்பாட்டு குழு தலைவர் இரா. கோமகன் மற்றும் ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் ஜே.ஆர். சிவராமகிருஷ்ணன் ஆகியோர் அவ்விடத்திற்கு சென்று ஆய்வை மேற்கொண்டனர்.   சுடுமண் உறைகிணறு             பள்ளம் ஏற்பட்ட இடத்தில் தரைதளத்தில் இருந்து இரண்டடி ஆழத்தில் வட்ட வடிவிலான சுடுமண் உறைகள் காணப்பட்டன. அவைகளை ஆய்வு செய்ததில் இப்பகுதியில் வாழ்ந்த பண்டைய கால ம...