ஒடிசா மகேந்திரகிரீ - வரலாற்று நிகழ்வில் சில திருத்தங்கள்

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் உதவிப்பேராசிரியர் வரலாற்றுத்துறை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி தஞ்சாவூர் முதலாம் இராஜேந்திர சோழன் மேற்கொண்ட கங்கைபடையெடுப்பின் போது. ஓட்டவிஷய மன்னனை தோற்கடித்த வெற்றியின் நினைவாக 5000 அடி உயரம் கொண்ட மகேந்திரகிரீ மலை மீது, மாலை வெயில்படும் இடத் தில் விஜயஸ்தம்பம் சோழபடையினரால் நாட்டப்பட்டது. இந்நிகழ்வை கூறும் கல்வெட்டு அம்மலையில் உள்ள யுதிஷ்டிரர் கோயில் கருவறையின் நுழைவாயில் மீது பொறிக்கப்பட்டுள்ளது. இதில் விமலாதித்தன் என்ற மன் னன் யார் என்பது குறித்து அறியமுடியவில்லை. ஆனால் மறுவாசிப்பில் சோழப்படை ஓட்டவிஷய மன்னனுடன் வந்த குலூதேச ( குலூதேசம் என் பது தற்போதைய ஹரியானா மாநிலம் ) மன்னன் விமலாதித்தனையும் சேர்த்து வென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு மறுவாசிப்பு सिद्धम्. जयति निजभुजालिनिर्जितोर्वीपमौलिप्रणतिगलित...