ஒடிசா மகேந்திரகிரீ - வரலாற்று நிகழ்வில் சில திருத்தங்கள்

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி 
தஞ்சாவூர்

          

          முதலாம் இராஜேந்திர சோழன்  மேற்கொண்ட   கங்கைபடையெடுப்பின் போது.  ஓட்டவிஷய மன்னனை  தோற்கடித்த   வெற்றியின் நினைவாக 5000 அடி உயரம் கொண்ட மகேந்திரகிரீ மலை மீது,  மாலை வெயில்படும் இடத் தில் விஜயஸ்தம்பம்  சோழபடையினரால்  நாட்டப்பட்டது.  இந்நிகழ்வை கூறும் கல்வெட்டு  அம்மலையில் உள்ள யுதிஷ்டிரர் கோயில் கருவறையின்  நுழைவாயில் மீது பொறிக்கப்பட்டுள்ளது.  இதில்  விமலாதித்தன் என்ற மன் னன் யார் என்பது குறித்து  அறியமுடியவில்லை. ஆனால் மறுவாசிப்பில் சோழப்படை  ஓட்டவிஷய மன்னனுடன் வந்த குலூதேச ( குலூதேசம் என் பது தற்போதைய ஹரியானா மாநிலம்) மன்னன் விமலாதித்தனையும்  சேர்த்து வென்றதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. 






கல்வெட்டு மறுவாசிப்பு 


सिद्धम्. जयति निजभुजालिनिर्जितोर्वीपमौलिप्रणतिगलितमाल्यालङ्कृतिस्थान
भूमिः। विमलयति यदीयं धाम लोकं समस्तं कलिमलिनितमुच्चैः भ्राजि राजेन्द्रचोलः।।
निर्ध्वस्तन्निजविक्रमेण विमलादित्यं कुलूतेश्वरं संग्रह्याद्रिनिभान् कलिङ्गपतिनान्द
त्ताकरो वारणान्भित्वा दण्डपतिः जगद्विजयिनो राजेन्द्रचोलस्य सन्ध्याप्रान्ते शिखरे
व्यधत्त विजय
स्तम्भम्महेन्द्राचले।।
ஸித்³ம். 
மங்கலம்.

ஜயதி நிஜ-புஜாலி-நிர்ஜிததோர்வீப-மௌலி-
ப்ரணதி-க³லித-மால்யாலங்க்ருதிஸ்தா²ன-பூமி꞉. 
விமலயதி யதீ³யம் தாம லோகம் ஸமஸ்தம் கலி-மலினித-முச்சைப்ராஜி ராஜேந்த்³ரசோல꞉..

ராஜேந்த்ரசோழன் வெல்கிறான். அவன் தன் தோளால் வென்ற மன்னவர்கள் வணங்கும்போது அவர்தம் தலைமாலையால் அலங்கரிக்கப்பெற்றவன். அவனுடைய புகழ் கலியால் அழுக்கடைந்த எல்லா உலகையும் தூய்மையாக்குவது. ஒளிர்வது.

நிர்த்வஸ்தம் நிஜ-விக்ரமேண விமலாதி³த்யம் குலூதேஶ்வரம் ஸங்க்³ரஹ்யாத்³ரி-நிபான் கலிங்க³பதினான்
தத்தாகரோ வாரணான்
பித்வா த³ண்ட³பதிஜக³த்³-விஜயினோ ராஜேந்த்³ரசோலஸ்ய ஸந்
த்யாப்ராந்தே ஶிக²ரே
வ்யதத்த விஜய
ஸ்தம்பம் மஹேந்த்³ராசலே..

அந்த ராஜேந்த்ர சோழனின் தளபதி குலூதத் தலைவனான விமலாதித் யனை வென்றான்.  தன் வலிமையால் கலிங்க வேந்தனின் மலையொத்த யானைகளைக் கைப்பற்றினான். சிலவற்றைப் பிளந்தான். மஹேந்த்ர மலையில் உலகை வெல்லும் ராஜேந்த்ர சோழனின் தளபதி மாலை வெயில் படுமிடத்து வெற்றித் தூணை நட்டான்


முந்தைய வாசிப்பு 


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு