புவனகிரி - திரிபுவன மாதேவி ஈஸ்வரம்
இராஜேந்திர சோழனின் தாய்ப் பாசம் – திரிபுவன மாதேவி ஈஸ்வரம் பேராசிரியர் Dr ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் முதலாம் இராஜேந்திர சோழன் சோழ வரலாற்றில் ஒப்பற்ற மன்னனாக விளங்கியவன். கி.பி. 1012 ஆம் ஆண்டு இளவரசனாக முடிசூட்டப்பட்டான். பிறகு தமது தந்தை முதலாம் இராஜராஜ சோழன் இறந்தப் பிறகு கி.பி. 1014 ஆம் ஆண்டு சோழப் பேரரசின் மன்னனாக அரியணையேறினான். இராஜேந்திர சோழன் தமது ஆட்சி காலத்தில், கங்கை வரை படையெடுத்துச் சென்று அங்கிருந்த நாடுகளை எல்லாம் வென்று கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீரால் தமது தலைநகரான கொங்கைகொண்ட சோழபுரத்தை புனிதமாக்கியதோடு அல்லாமல் தலைநகரில் கங்கை படையெடுப்பின் நினைவாக ஜலஸ்தம்பம் நாட்டினான். அதாவது சோழகங்கம் என்ற ஏரியை நிர்மாணித்து அப்பகுதியை வளமாக்கினான். மேலும் தமது கப்பற்படையின் வலிமையால் தென்கிழக்கு ஆசிய நாடுகளான கடாரம், ஜாவா ,சுமத்திரா , இந்தோனேசிய, இலங்கை போன்ற தேசங்களை தமது வர்த்தக மேலாதிக்கத்தின் க...