Posts

Showing posts from August, 2016

வடசென்னிமலை முருகன்

Image
         வடசென்னிமலை முருகன்    சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் காட்டுக்கோட்டை அருகே வடசென்னி மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. குன்று அமைந்துள்ள இடங்கள் எல்லாம் குமரன் குடியிருக்கும் இடம். அந்தவகையில் வட சென்னி மலை யும் இயற்கையாக அமைந்த மலையாகும். இம் மலை மீது அமைந்துள்ள கோயிலில் முருகன் குழந்தை பருவத்துடனும் , திருமணக் கோலத்திலும் , முதிர்ந்த பருவ தண்டாயுதபாணியாகவும் மக்களுக்கு காட்சித் தருகிறார். கோயில் வரலாறு      சுமார் 300 ஆண்டுகால பழமையான இக்கோயிலில் சுயம்பு வடிவமாக முருகன் வள்ளி , தெய்வானையுடன் பக்கதர்களுக்கு காட்சியளித்தார். பிறகு வடகுமரை என்ற ஊரை சார்ந்த அப்பன்ன சுவாமிகள் வைணவ சமயத்தின் மீது அதிகம் பற்றுள்ளவர். இருப்பினும் வடசென்னிமலை சுயம்புவாக உள்ள முருகனிடத்தில் அதீத பக்தி கொண்டவர். இதனால் முருகனின் குழந்தை வடிவ சிலை ஒன்றை செய்வதற்காக காஞ்சிக்கு சென்று மாகாப்பெரியவரை நேரில் சந்தித்து. வடசென்னிமலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலையை எந்த சிற்பியிடம் செய்தால் சிலை நன்றாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு மகாப்பெரியவர் திருவண்ணாமலையில் உள்ள இரமணர் ஆசரமத்தில் வைத்தியநா

நேபாள முருகன்

Image
                                                                                                       நேபாள முருகன்                      Lord Muruga's statue, originally made in Kathmandu Valley in Nepal. This statue is dated 8th or 9th Cent AD, and can be found at the Chicago Museum of Arts, North America. Its a gift to the museum, donated by Marilynn B.Alsdorf in 2014.              முருகன் வடிவத்தில் இப்படி ஒரு வடிவமா என ஆச்சரியப்பட வைத்தது இந்தச் சிலை. இது நேப்பாளின் காட்மண்டு பகுதியில் உருவாக்கப்பட்ட சிலை. கி.பி 8 அல்லது 9 என காலம் கணிக்கப்படும் இச்சிலை தற்சமயம் சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. முருகன் அமர்ந்திருக்கும் மயில் வாகனம் தான் , இது முருகன் சிலை என பார்ப்போர் அறிந்து கொள்ளும் வகையில் உதவுகின்றது. முக வடிவம் நேப்பாள மக்களின் முகச்சாயலை ஒத்திருக்கின்றது. இதனை மேரிலின் ஆல்ஸ்டோர்ஃப் என்பவர் இந்த அருங்காட்சியகத்திற்கு 2014 ம் ஆண்டில் பரிசாக அளித்திருக்கின்றார். நன்றி  ;   சுபா  MAM .