வடசென்னிமலை முருகன்

        


வடசென்னிமலை முருகன் 

  சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் காட்டுக்கோட்டை அருகே வடசென்னி மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. குன்று அமைந்துள்ள இடங்கள் எல்லாம் குமரன் குடியிருக்கும் இடம். அந்தவகையில் வட சென்னி மலை யும் இயற்கையாக அமைந்த மலையாகும். இம் மலை மீது அமைந்துள்ள கோயிலில் முருகன் குழந்தை பருவத்துடனும் , திருமணக் கோலத்திலும் , முதிர்ந்த பருவ தண்டாயுதபாணியாகவும் மக்களுக்கு காட்சித் தருகிறார்.

கோயில் வரலாறு

     சுமார் 300 ஆண்டுகால பழமையான இக்கோயிலில் சுயம்பு வடிவமாக முருகன் வள்ளி , தெய்வானையுடன் பக்கதர்களுக்கு காட்சியளித்தார். பிறகு வடகுமரை என்ற ஊரை சார்ந்த அப்பன்ன சுவாமிகள் வைணவ சமயத்தின் மீது அதிகம் பற்றுள்ளவர். இருப்பினும் வடசென்னிமலை சுயம்புவாக உள்ள முருகனிடத்தில் அதீத பக்தி கொண்டவர். இதனால் முருகனின் குழந்தை வடிவ சிலை ஒன்றை செய்வதற்காக காஞ்சிக்கு சென்று மாகாப்பெரியவரை நேரில் சந்தித்து. வடசென்னிமலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலையை எந்த சிற்பியிடம் செய்தால் சிலை நன்றாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு மகாப்பெரியவர் திருவண்ணாமலையில் உள்ள இரமணர் ஆசரமத்தில் வைத்தியநாத சிற்பி என்றொருவர் இருக்கிறார் அவரிடம் சிலையை செய்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். உடனே அப்பன்ன சுவாமிகள் திருவண்ணாமலைக்குச் சென்று இரமணர் ஆசிரமத்தில் இருக் கும் வைத்தியநாத சிற்பியை சந்தித்தார். ஆனால் வைத்தியநாத சிற்பிக்கு பார்வை தெரியாத குருடராகவும் , வாய்ப்பேச முடியாத ஊமை யாகவும் இருப்பதை கண்டு பயந்தார். பார்வையற்ற இந்த சிற்பியால் எப்படி சிலை செய்யமுடியும் என்ற சந்தேகத்தோடு இருந்தார். காஞ்சிப்பெரி யவர் தம்மை சோதிப்பதாக நினைத்து வைத்தியநாத சிற்பியிடம் வடசென்னி மலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலை ஒன்றை வடித்து தருமாறு உரத்த குரலில் வேண்டினார். சைகையால் சம்மதம் தெரிவித்த வைத்தி யநாத சிற்பி சில தினங்களிலேயே அற்புதமான அழகிய முருகனின் குழ்ந்தை வடிவ சிலையை செய்து அப்பன்ன சுவாமியிடம் தந்தருளினார்.

முருகனின் சிறப்பு

   இக்கோயில் மேற்கு நோக்கியவாறு அமைத்துள்ளது. மூன்று சன்னதிக ளைக் கொண்ட இக்கோயிலில் முருகனின் குழந்தை பருவ முருகனானவும், முதிர்ந்த பருவ தண்டாயுதபாணியாகவும், வள்ளி , தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக முருகனின் மூன்று பருவத்தையும் ஒரேயிடத்தில் இக்கோயிலில் மட்டுமே காணமுடியும். இங்குள்ள குழந்தை வடிவில் உள்ள முருகனை அம்மாவசை முடிந்து வளர்பிறை சஷ்ட்டியில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதாவது சஷ்ட்டி எனும் திதியில் விரதம் இருந்தால் அகம் என்னும் பையில் கருவளரும் என்பது ஐதீகம். 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி