ஓடிசா மகேந்திரகிரி ஆய்வு

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி 
தஞ்சாவூர்




ஓடிசா மகேந்திரகிரி ஆய்வு


இராஜேந்திரனின் படைகள்  ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினான்.                           என்றசெய்தி....ஒடிசா  மாநிலம் மகேந்திரகிரி மலை மீது அமைந்துள்ள   யுதிஷ்டிரர் மற்றும் குந்திதேவி கோயில்களில் உள்ள கல்வெட்டுச் சான்றுகள் மெய்பிக்கின்றனயுதிஷ்டிரர் கோயில் கருவறையின் நிலைவாயிலுக்கு மேலாகக் காணப்படும் கல்வெட்டு தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ளன.   அதில்  ராஜேந்திர சோழன் தன்னுடைய தோள் வலிமையால் விமலாதித்தனையும்,   மலைநாட்டு அரசர்களையும்கலிங்க அரசனையும் வென்று மகேந்திரமலை   உச்சியில் விஜயஸ்தம்பத்தை நாட்டினான்’ என்று குறிப்பு உள்ளதுஇக்கல்வெட்டுக்குக் கீழேவரை கோட்டு வடிவில்அமர்ந்த நிலையில் புலியின் ஊருவமும் 3 மீன்களின் உருவங்களும் சோழர் இலச்சினையாகக் காணப்பெறுகின்றன.அருகில் உள்ள குந்தி கோயில் வளாகத்தில் மூன்று நான்கு துண்டு   களாகக்கிடக்கும் கல்வெட்டில்மகேந்திர கிரியில் விஜயஸ்தம்பம் நாட்டிய குறிப்பும்ஒடிசா மன்னனின் பட்டத்து யானையைக் கொன்ற இராஜேந்திரனின் தலைமை தளபதி (மகாநாயகன்)இராஜேந்திர சோழ பல்லவரையனான ராஜ ராஜ மாராயன் என்பானுக்கு மகேந்திர கிரீஸ்வரத்தில் வீர அங்குசம் பரிசாக  அளிக்கப் ‘விட்டி வீரண மல்லன்’ என்ற விருது அளிக்கப்பட்ட குறிப்புகளாகக் காணப்படுகின்றன.இதில்இராஜேந்திர சோழன் தன்னுடைய தோள் வலிமை யால் விமலாதித்தனையும்மலைநாட்டு அரசர்களையும்கலிங்க அரசனை யும் வென்று மகேந்திரமலை உச்சியில் விஜயஸ்தம்பத்தை நாட்டினான்’   என்று குறிப்பின் வாயிலாக முதலாம் இராஜேந்திர சோழன் ஒடிசா மகேந்திரகிரிமலைவரை தனது பாதத்தை பதித்துள்ளான் என்பது புலனாகிறது. 



















Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு