பிற்கால கல்வெட்டுக்களில் திருக்குறள்

 

பிற்கால கல்வெட்டுக்களில் திருக்குறள்

 

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

வரலாற்றுத்துறை 

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி - தஞ்சாவூர்.

முன்னுரை

  பண்டையத் தமிழர்தம் வரலாறு, பழக்கவழக்கம், பண்பாட்டுக் கூறுகள், வர்த்தக தொடர்பியல், வாழ்வியல் நெறிமுறைகள், சமயநிலை, நீர்மேலாண்மை போன்ற வற்றை அறியவுதவும் மூலங்கலுள் தொல்லியல் சான்றுகள், நாணயங்கள், கட்ட டக்கலை, இலக்கியச் சான்றுகள் போன்றவற்றின் பயன்பாட்டைப் போலவே கல் வெட்டுச் சான்றுகளும் இப்பயன்பாட்டில் பெரிதும் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டுக்களில் கற்பனைக்கோ, புனைந்துரைக்கோ, கட்டுக்கதைகளுக்கோ சிறிதும் இட மில்லை. மாறாக, உள்ளதை உள்ளவாறு உணர்த்துகின்ற உண்மைக்கு மட்டுமே இடமுண்டு. அத்தகைய பெருமை மிகு கல்வெட்டுகளை அதன் பொருண்மைக்கு தகுந்தாற்போல் இலக்கியக் கல்வெட்டுக்கள், வரலாற்றுக் கல்வெட்டுக்கள், சமயத் தொடர்புடைய கல்வெட்டுக்கள், கொடை கூறும் கல்வெட்டுக்கள் என வகைப்படுத்துகின்றனர் ஆய்வாளர்கள். மேலும் கடந்தகால நிகழ்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் அழிவற்ற சான்றாக விளங்கும் இக்கல்வெட்டுகளில் உலகப் பொதுமறையாம் திருக்குறளும் இடம்பெற்றிருப்பது பெருமைமிகு ஒன்றாகும். எனவே தான் இக்கட்டுரையின் நோக்குறுவானது பிற்கால கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள திருக்குறளை விவாதிப்பதை கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

கல்வெட்டில் திருக்குறள்

   சேலம் மாவட்டம் மல்லூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் பொன்பரப்பிப் பட்டி கிராமம் அமைந்துள்ளது. மன்னர் காலத்தில் நாணயச்சாலையில் இருந்து பொற் காசுகளை ஏற்றிச் சென்ற வண்டியின் அச்சு முறிந்து மூட்டையில் கட்டப்பட்டிருந்த பொற்காசுகள் கீழே சிதறி ஓடியதால் அன்றைய நாளிலிருந்து இவ்வூருக்கு பொன் பரப்பி என பெயர் பெற்றது. பிறகு பொன்பரப்பிபட்டி என வழங்கப்பட்டதாக அவ்வூர் மக்கள் கூறி வருகின்றனர். பொன்பரப்பியை தலைநகராகக் கொண்டு சோழங்கதேவன் என்ற குறுநில மன்னன் கி.பி.1218 ஆம் ஆண்டு முதல் கி.பி.1261 வரை இப்பகுதியினை ஆட்சிசெய்துள்ளான். இராஜேந்திர சோழனின் ஏழாம் ஆட்சியாண்டைச் சார்ந்த இராசிபுரம் காக்கவேரி கிராமத்தில் உள்ள சிவன் கோயில்  கல்வெட்டில் சேலநாட்டு அஞ்சாத பெருமாளான சோழங்கதேவன் பொன்பரப்பினான் என்ற செய்தியினை கூறுகி றது.    

    இப்புகழ்பெற்ற ஊரின்கண் அமைந்துள்ள பொன்சொரி மலையில் திருக்குறள் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இம்மலையின் நடுவே கன்னிமார் பாழிக்கு மேலே சுமார் பத்தடி உயரத்தில் ஆறு வரிகளில் திருக்குறள் ஒன்று கல்வெட்டுக்களாக பொறிக்கப் பட்டுள்ளது. இது தமிழகத்தில் அறியப்படும் மிகப் பழமையான திருக்குறள் கல்வெட்டாக கொள்ளலாம். இதன் காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டா கும்.

1.       தன்னூன்

2.       பெருக்கற்

3.       குத் தான் பி

4.       பா னெங்ங

5.       நிதூனூண்

6.       ன மாளுமருள்.

        


        தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

         எங்ஙனம் ஆளும் அருள்.

 

   இக்குறட்பாவானது புலால் மறுத்தல் அதிகாரத்தில் குறள் எண் 251 இல் இடம் பெற்றுள்ளதாகும். தன் உடல் பெருக்க பிற உயிர்களின் ஊனை உண்பவன் எப்படி சான்றோனாவான் என்ற சமண நெறிகளில் தலையாய நெறியாக திகழும் ஜீவ காருண்ய கோட்பாட்டினை வலியுறுத்தும் விதமாக இக்குறட்பா விளங்குகிறது. ஒரு காலத்தில் சமண சமயத்தவர்கள் பொன்பரப்பி மலையடிவாரதில் வாழ்ந்துள்ளனர். அதற்குச் சான்றாக இவ்வூரில் சமண மடத்தை குறிக்கும் கல்வெட்டு ஒன்று அண் மையில் கிடைத்துள்ளது. அக்கல்வெட்டானது தற்பொழுது சேலம் அருங்காட்சிய கத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பண்டைய எழுத்து ஆவணங் களில் திருக்குறளை முன் உதாரணம் காட்டும் செப்பேடுகள் தமிழகத்தில் பரவலாகக் கிடைத்துள்ளன. இவற்றிற்கு சிறந்த சான்றொப்பாக கபிலமலைச் செப்பேடு, பல்லடம் செப்பேடு, காரையூர் செப்பேடு போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.

   தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையினர் சென்னைக்கு அருகே உள்ள இராயப் பேட்டையில் கிணற்றுக்கல்வெட்டு ஒன்றினை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந் தனர். நாற்பத்து ஆறு வரிகளைக் கொண்ட அக்கல்வெட்டானது கி.பி.1818 ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியைச் சார்ந்த ஆளுநர் எல்லிஸ் என்ற பெருமக னார் சென்னை மாநகரில் மக்களின் பயன்பாட்டிற்காக இருபத்து ஏழு கிணறுகளை தோண்டி அதை மக்களின் பயன்பாட்டிற்காக அற்பணித்த செய்தியினை கூறுவதாக  அக்கல்வெட்டில் சுட்டப்பட்டிருந்தது.

பிரான்சிசு வைட் எல்லிசு

  இவர் கி.பி.1796 ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தர் பணி யில் சேர்ந்து கி.பி.1798 ஆம் ஆண்டு துணைக் கீழ்நிலை செயலாளராக உயர்ந்து, கி.பி. 1801 ஆம் ஆண்டு துணைச்செயலாளராக பதவி உயர்வு பெற்றார். கி.பி.1802 ஆம் ஆண்டு வருவாய்த்துறைச் செயலாளரானார். பிறகு கி.பி.1806 ஆம் ஆண்டு மசூலிப் பட்டினத்தின் நீதிமான் பதவினை எய்தினார். கி.பி.1809 ஆம் ஆண்டு சென்னை மாக ணத்தின் நிலச்சுங்க அதிகாரியாகப் பதவியேற்றார். பிறகு கி.பி.1810 ஆம் ஆண்டு சென் னையின் கலெக்டராக பதவியேற்றார். கி.பி.1814 ஆம் ஆண்டு சென்னை மாகணத் தின் ஆளுநராக விளங்கினார். இவர் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் திராவிட மொழிகளின் மீது அதிகப்பற்று கொண்டவராக விளங்கினார். மேலும் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினால் இராமச்சந்திரக் கவிராயரிடம் தமிழ்மொழியினை பாங்குற கற்றுணர்ந்தார். அப்பொழுதுதான் திருக்குறள் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இதன் மூலம் திருக்குறள் வாசிப்பதை தமது வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகவே கருதிவந்தார். எனவேதான் எல்லிஸ் பெருமகனார் திருக்குறளின் மீது கொண்ட அதீத பற்றினால் மக்களின் தாகம் தீர்க்க தாம்மால் வெட்டுவிக்கப்பட்ட இராயபுரம் கிணற்றில் தண்ணீரின் முக்கியத்துவத்தை பொதுமக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குருவின் காரணமாக கல்வெட்டின் முப்பத்தி நான்காவது வரியில் ஒரு நாட்டின் அசைக்கமுடியாத அரணாக விளங்குவது யாது என்பதை உணர்த்தும் விதமாக ....

 ‘’இருபுனலும் வாய்ந்த தலையும் வருபுனலும்

  வல்லரணு நாட்டிற் குறுப்பு’’.

என்ற திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் ஒரு நாட்டிற்கு முக்கிய உறுப்பாகும் என்ற வள்ளுவரின் வாக்கினை வலியுறுத்தும் விதமாக அக்கல்வெட்டு மக்களின் பார்வைக்காக வைக்கப் படிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக கொள்ளலாம். இக்குறளானது வள்ளுவத்தில் 737 வது குறளாகும்.

முடிவுரை

  இந்தியாவில் இதுவரை சுமார் ஒருலட்சம் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. இவற்றில் சுமார் முப்பதாயிரம் தமிழ் கல்வெட்டுக்களும் அடங்கும். தமிழ்நாட் டில் கல்வெட்டின் தொடக்ககால முதல் வாழ்ந்துவந்த மக்களினத்தின் வரலாற்றுக் கூறுகளை உள்ளபடியாக வடித்துக் காட்டும் காலத்தச்சனின் கண்ணாடியாக விளங்கி வருபவை கல்வெட்டுச் சான்றுகளாகும். இவ்வழிவில்லாச் சான்றில் அய்யன்  வள்ளு வரின் திருக்குறளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் தமிழர் தம் வாழ்வில் வள்ளுவத்தின் வழி நிற்றல் என்ற அறக்கோட்பாட்டின் வெளிப்பாடே வள்ளுவம் கல்வெட்டில் இடம்பெற்றதற்கு முக்கிய காரணமாகக் கொள்ளலாம்.    

நோக்குநூல் பட்டியல்

1.       அ.கிருட்டிணன், கல்வெட்டில் வாழ்வியல்.

2.       ச.கிருஷ்ணமூர்த்தி, திருக்குறள் பழைய உரை.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி