முனைவர் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார்
நன்றி – சிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் ( Dr. P.S. Subrahmanya Sastri- பின்னங்குடி சாமிநாத சுப்பிரமணிய சாஸ்திரி) அவர்கள் ஒரு பன்மொழி அறிஞர். தமிழிற்கும் வடமொ ழிக்கும் இலக்கியப்பணிகள் பல ஆற்றியவர். தமிழிலக்கணப் பணியும் மொழிநூற் பணியும் செய்த இவர் தொல்காப்பியத்தை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த் தவர். “ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி ” உருவானதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இவரது சிறந்த மொழியியற் புலமையையும் , மொழியிலக்கண அறிவையும் , ஒப்பியல் ஆய்வுத் திறமையையும் , கண்டு வியந்து இவரது பெயரான பி.சா. சுப்பிரமணியம் என்பதன் சுருக்கமாக , செல்லமாக “ பிசாசு ” என்றும் அழைக்கப் பட்டார் (இவரை குறித்து “ தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ” – http://siragu.com/ தமிழாய்வில்-முதலில்-முனை/ – என்ற சிறகு கட்டுரை வழியாக மேலும் அறியலாம்). உரையாசிரியராகவும் , மொழிபெயர்ப்பாளராகவும் பலந...