திருவலஞ்சுழி
திருவலஞ்சுழி
ஊரின் பெயர் திருவலஞ்சுழி. சுவாமிமலைக்கு அருகிலுள்ள இவ்வூ ரில் மூன்று
பெரும் வளாகங்களுடன், பிரம்மாண்ட மதில்கள் சூழ்ந்த கோயில் ஒன்று உள்ளது. இறைவன்
பெயர் சடைமுடிநாதர். இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவுக்கும் செய்திகளை பார்த்தால் மிக
ஆச்சர்யமாக உள்ளது, இந்த சடைமுடிநாதர் கோயிலின் முதல் வளாகத்தில் தெற்கு புறம்
இருக்கும் சேத்ரபாலர் கோயிலை மிதிக்காத சோழ குடும்பமே இல்லை என்று சொல்லும்
அளவிற்கு சோழர்கள் பொன்னும் பொரு ளும்
வாரி இறைத்து தங்கள் தலை மீது வைத்து இந்த சேத்ரபாலரை கொண்டாடி இருக்கிறார்கள், ஆனால் இன்றைக்கு
யாருமே தப்பித் தவறி கூட அந்த இடத்திற்கு செல்வதில்லை, பல அற்புதங்கள்
நிகழ்ந்த இந்த கோயிலில் ஒரு அற்புதமாக இராஜேந்திரர் தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவாகத்
எள்மலை புகுந்தது இக்கோயிலில் தான்!. இன்னொரு சுவாரசியமான விஷயம் சொல் லட்டுமா? இராஜேந்திரர் தம்
மூன்றாம் ஆட்சியாண்டில் இந்த கோயி லுக்கு வந்து,
அந்த கோயிலின் மேற்குப்புறத்தில்
இருக்கும் வியாள கஜமல்லன் என்ற நந்தவனத்தில்
இருந்த காவணத்தில் அமர்ந்து உணவு
உண்டிருக் கிறார்! உண்ணும் போது கோயில் செயல்பாடுகளுக்காக நிலக் கொடைய ளித்து
உத்தரவிட்டிருக்கிறார்!. அவர் உணவுண்ட இடம் எங்குள் ளது என்று கேட்கிறீர்களா? கோயிலுக்குள்
நுழைந்து இரண்டாம் வளாகத்தை அடைந்த தும் மேற்கு புற மூலையைப் திரும்பிப்
பாருங்கள், கடல் கடந்து பல தேசங் களை ஆண்ட அந்த மாமன்னன் அமர்ந்து உண வுண்ட அந்த இடம் உங்கள் கண்களுக்கு புலப்படும்! ஆம்...அம்மா மனிதர் அங்கு தான் உலவி இருக்கி றார், அங்கு தான்
உட்கார்ந்திருக் கிறார்! அங்கு தான் உணவு உண்டிருக் கிறார்! அங்கு தான் பேசி
இருக்கி றார்! நினைவில் கொள்ளுங்கள் அவர் சாதாரணமானவர் அல்ல "அலை
கடல் நடுவே பலகலம் செலுத்தி" பல தேசங்களை வென்ற இராஜேந்திரசோழன் என்ற
பெயரைக் கொண்ட ஒரு மாபெரும் பேரரசன்!.
Comments
Post a Comment