அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு 177 ஆண்டுகளை கடந்த பழமையும் , பெருமையும் பெற்ற தஞ்சை மாவட் டம் , அணைக்கரையில் உள்ள கீழணையைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியா ளர் சர் ஆர்தர் காட்டன் என்பவர் பிரிட்டிஷ் பொறியாளர் மற்றும் படைத்தள பதி ஆவார் இவர் தனது வாழ்க்கை முழுவதையும் இந்தியாவில் நீர்ப்பாசன வசதி செய்துதரவும் , கால்வாய்களை அமைப்பதிலும் அர்ப்பணித்தார் . இவர் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார் . 1829- ல் காவிரி பாசனப் பகு திக்கு பொறுப்பாளராக நியமிக்கப் பட்ட ஆர் தர் காட்டன் , மணல்மேடு களால் நீரோட்டம் தடைபட்டிருந்த கல்லணை யில் மணல் போக்கிகளை அமைத்தார் . அப்போது , கரிகால் சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்து , “ ஆழம் காண முடியாத ஆற்று மணற்படுகையில் அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பத்தை பண் டைய தமிழர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன் ” என்றார் கல்லணைக்கு ‘ கிராண்ட் அணை கட் ’ என்ற பெயரைச் சூட்டியவரும் இவரே . ...
Comments
Post a Comment