Posts

MY PUBLICATIONS

Image
 

சிதம்பரம்

Image
சிதம்பரம்   

நெல்லின் வகைகள்

Image
                                                                      நெல்லின் வகைகள் மேலைச் சாளுக்ய மன்னன் மூன்றாம் சோமேச்வரன் விக்ரம சோழனுக்குச் சமகாலத்தவன். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். பல்கலை வித்தகன். அவன் எழுதிய மானஸோல்லாஸம் என்னும் ஒரு நூல் கலைக்களஞ்சியமாகப் போற்றப்பெறுகிறது. கர்ணாடக இசை, கட்டிடக்கலை, தாவரவியல், விலங்கியல், விலங்கு மருத்துவம், அரசியல், நிர்வாகம் ஆகியவற்றிற்கு மிகச் சிறந்த நூலாக இதைச் சொல்லலாம். தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்பெற்ற இந்த நூலில் எட்டுவகையான நெற்பயிர்கள் குறிப்பிடப்பெற்றிருக்கின்றன. அவையாவன 1. மஹாசாலி 2. ரக்த சாலி 3. ஸ்தூல சாலி 4. ஸூக்ஷ்ம சாலி 5. கந்த சாலி 6. கலிங்க சாலி 7. ஷாஷ்டிக சாலி  8. முண்ட சாலி சாலி என்றால் நெல்லைக் குறிக்கும் வடமொழிச்சொல். நெல்வேலியைச் சாலிவாடி என்று வடமொழியிற்குறிப்பர். இவற்றுள் மஹாசாலி என்பது பெரிய அளவிலான நெல். ரக்த சாலி என்பது ...

ப்ரஹ்மதேயம்

Image
                                                                        ப்ரஹ்மதேயம் அந்தணர்களுக்கு அளிக்கப்பெற்ற இறையிலி நிலங்கள் ப்ரஹ்மதேயம் எனப்பெற்றது. இந்தச் சொல்லாட்சி அர்த்தசாஸ்த்ரத்திலும் பௌத்த நூல்களிலும் கூட பயின்று வந்துள்ளது. அர்த்தசாஸ்த்ரம் அரசன் ப்ரஹ்மதேயங்களை வழங்கவேண்டும் என்கிறது. நாகசாமி அவர்கள் ப்ரஹ்மதாயம் என்பதே சரியான சொல்லாட்சி என்கிறார். அது பொருந்தாது. ப்ரஹ்மதேயம் என்ற சொல்லாட்சியே சரியானது. தமிழகத்திலும் இத்தகைய ப்ரஹ்மதேயங்கள் பன்னெடுங்காலமாக இலங்குகின்றன. வேள்விக்குடிச் செப்பேடு பாண்டியருள் வரலாற்று அரசர்களில் பழையோனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி நற்கொற்றன் என்னும் அந்தணனுக்கு வேள்விக்குடியை வழங்கியதாகவும் இடையில் களப்ரர் இறங்கலால் அது அற்றுப் போக நற்கொற்றன் வழியில் வந்த நற்சிங்கன் அதனைக் கேட்டுப் பெற்றதாகக் கூறுகிறது. ஆக பொயுமு மூன்று-இரண்டாம் நூற்றாண்டுகளிலிருந்தே அந்தணருக்கு இ...

கோப்பெருஞ்சிங்கன்

Image
                                                        கோப்பெருஞ்சிங்கன்   சோழர்களின் சாதி என்ன? அவர்களின் சாதி இது என கூற எதாவது சான்றுகள் உண்டா? என்பதற்கான பதிலை கீழே காண்போம் - கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் குலோத்துங்கன் மகளை தில்லையில் திருமணம் செய்தவன் என்பததை செய்யாறு கல்வெட்டு குறிப்பிடுகிறது - "பல்லவர்கோன் செந்தளிர்க் கைகோத் தபையன் மகளுடன் தில்லையுலா வந்தளிக் கும்பெரு மான்வெற்பர் மாதை மணஞ்செய்யவே"(A.R.E No.140, 1939-40) இதனால் மூன்றாம் குலோத்துங்கனின் மகனான மூன்றாம் இராஜராஜ சோழன் கோப்பெருஞ்சிங்கனுக்கு "மாப்பிள்ளை" முறை ஆகும், அதாவது மூன்றாம் இராஜராஜனின் சகோதிரியின் கணவர் கோப்பெருஞ்சிங்கர்  அடுத்து வயலூரில் உள்ள கல்வெட்டு கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது - "பெருங்களிற்றுச் சோழனையும் மைச்சரையும் பிடித்துச் சிறையிலிடக் களிறுவிடு மிண்டன் சீயா"(Epigraphia Indica, Volume - 28, page - 174 - 182) களிறு - யானை, சீயா - சிங்கம் இதே கல்வெட்டில் மற்...

வளஞ்சியர்

Image
  தனுஷ்கோடியில் மாயமான வட்டெழுத்து கல்வெட்டுப் பற்றிய தகவல்கள் - வணிகர் கல்வெட்டு தனுஷ்கோடி காட்டுப்பகுதியில் சிதைந்து மண்மூடிய காளி கோயில் அருகே உள்ள முனீஸ்வரர் கோயிலில் சூலம் அருகே சூடம் ஏற்றும் கல்லாக இச்சதுரத் துண்டுக்கல் உள்ளது. கல்வெட்டின் ஒரு சிறு பகுதியே உள்ள போதும் நல்ல 8 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து அமைதியில் இக் கல்வெட்டுள்ளது. வணிகக் குழுக்கள் பற்றிய குறிப்பும் உள்ளது. 1. வரும் ச 2. ஸமீசுவரத்து வூரோ  3. ம் வளஞ்சிய 4. திசையாயி 5. ... இலங்கை மற்றும் பாண்டிய அரசுகளுக்கானத் தொடர்பின் பின்னணியில் வணிகர்களின் நடவடிக்கைகளே முன்நிற்பன. இது துண்டுக் கல்வெட்டானாலும் 'ராமேசுவரம்', 'வளஞ்சியர்', 'திசையாயிரத்தவர்' குறித்த சொற்களைக் கொண்டுள்ளமை சிறப்பாகும். அதுவும் ஒரு காளி கோயில் பகுதியில் கிடைப்பதும் இன்னும் சிறப்பாகும். வளஞ்சியர், திசையாயிரத்தவர் வணிகக் குழுவினரே. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் காளியின் செப்புத் திருமேனி ஒன்று இன்றும் இராமேஸ்வரத்தில் இராமர் இலக்குமணர், சீதை, அனுமன் குழுச் செப்புத் திருமேனிகளுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இராமேசுவரம் இடைக்காலப்...