கோப்பெருஞ்சிங்கன்

 

                                                      கோப்பெருஞ்சிங்கன்







 

சோழர்களின் சாதி என்ன? அவர்களின் சாதி இது என கூற எதாவது சான்றுகள் உண்டா? என்பதற்கான பதிலை கீழே காண்போம் -


கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் குலோத்துங்கன் மகளை தில்லையில் திருமணம் செய்தவன் என்பததை செய்யாறு கல்வெட்டு குறிப்பிடுகிறது -

"பல்லவர்கோன் செந்தளிர்க் கைகோத் தபையன் மகளுடன் தில்லையுலா வந்தளிக் கும்பெரு மான்வெற்பர் மாதை மணஞ்செய்யவே"(A.R.E No.140, 1939-40)

இதனால் மூன்றாம் குலோத்துங்கனின் மகனான மூன்றாம் இராஜராஜ சோழன் கோப்பெருஞ்சிங்கனுக்கு "மாப்பிள்ளை" முறை ஆகும், அதாவது மூன்றாம் இராஜராஜனின் சகோதிரியின் கணவர் கோப்பெருஞ்சிங்கர் 

அடுத்து வயலூரில் உள்ள கல்வெட்டு கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது -

"பெருங்களிற்றுச் சோழனையும் மைச்சரையும் பிடித்துச் சிறையிலிடக் களிறுவிடு மிண்டன் சீயா"(Epigraphia Indica, Volume - 28, page - 174 - 182)

களிறு - யானை, சீயா - சிங்கம்

இதே கல்வெட்டில் மற்றொரு வரி வருகிறது 

"சகலபுவன சக்கரவர்த்தி ஶ்ரீ கோப்பெருஞ்சிங்கன் சோழனை தெள்ளாற்றில் வென்று சகல பரிச்சின்னமுங் கொண்டு சோழனை சிறையிட்டு வைத்து சோணாடு கொண்ட அழகிய சீயன்"

கோப்பெருஞ்சிங்கன் என்கிற பல்லவ மன்னன் மூன்றாம் இராஜராஜ சோழனை தெள்ளாற்றில் வென்று சிறைப்படுத்தி அவனை "யானை" என்றும் தன்னை "சிங்கம்" என்றும் கல்வெட்டில் குறிப்பிட்டான் 

அண்ணமங்கலம் குகையில் உள்ள ஒரு சிற்பம் உள்ளது, ஒரு சிங்கம் யானையை விழுங்குவது போல அந்த சிற்பம் அமைந்துள்ளது, அந்த யானையின் கண் புருவத்தில் இந்த கல்வெட்டு வாசகம் அமைந்துள்ளது -

"சொக்கப் பல்லவன் வாய் செ
ல்லும் வன்னிய மணாளன்"(கல்வெட்டு காலாண்டிதழ் - 98)

வயலூர் கல்வெட்டில் சோழனை களிறு என்றும் பல்லவனை சீயன் என்றும் குறிப்பிட்டதை போலவே இந்த சிற்பம் அமைந்துள்ளது, இதிலும் யானையை சிங்கம் வீழ்த்துவது போல சிற்பம் அமைந்துள்ளது

இதனால் இதில் குறிப்பிடும் சொக்க பல்லவன் என்பது கோப்பெருஞ்சிங்கன் என்பதும், "வன்னிய மணாளன்" என்பது மூன்றாம் இராஜராஜன் என்பதும் விளங்கும்

தனது மாப்பிள்ளையான மூன்றாம் இராஜராஜரை கோப்பெருஞ்சிங்கன் அவர்கள் "வன்னிய மணாளன்" என்று குறிப்பிட்டார்கள் என்பதாகும்

இதனால் சோழர் சாம்ராஜ்யம் என்பதும் அவர்களின் இரத்த பந்தம் கொண்ட குறுநில மன்னர்களின் வரலாறு என்பது வன்னியர்களின் வரலாறு என்பது விளங்கும்

"இன்று மாமன்னன் இராஜராஜனின் 1039ஆவது சதய திருநாள்"
நன்றி 
இணையப் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது...

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

சங்க இலக்கியத்தில் விலங்குகள்

மண்பாண்ட வகைகள்