பெண்கள் போர்செய்யும் காட்சி நடுகல்

 தேன்கனி கோட்டை அருகே சந்தனப்பள்ளியில் அரசகுல பெண்கள் போர்செய்யும்  காட்சி  நடுகல் 


தேன்கனிகோட்டையிலிருந்து  பயணித்து இடதுபுரம்திரும்பி பெட்டமுகிலம் போகும் சாலையில் பத்து கி.மீ தூரம் பயணம் செய்தால் சந்தனப்பள்ளி வருகிறது.ஊர் பஸ்நிறுத்தத்திலிருந்து சற்றுதூரம் தள்ளி இடதுபுரம் திரும்பி விவசாய நிலம்வழியே நந்து சென்றால் பன்னியம்மன் ஏரிகோடி வருகிறது.இங்குதான் இந்த வகையான நடுகல் இருக்கிறது.கல்வீடு அமைப்பில் செய்யப்பட்ட அமைப்பில் இடது புர கல்லில் இக்கற்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.  13  ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல் மூன்று பெண்சிற்பங்கள் மூன்று குதிரையின் மீது அமர்ந்துள்ள நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.மூன்று பெண்களின் வலது கரத்தில் சிறிய ஆயுதமும் இடது கரம் மேல்நோக்கி மடிந்த நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளது.முதல் மற்றும்மூன்றாவது பெண்சிற்பங்களுக்கு மேல் குடைபிடிக்கப்பட்டுள்ளது.இவ்விரண்டுபெண்களும் அரசிக்கு அடுத்த நிலையிலிருந்து போர் செய்பவர்களாக இருக்க வேண்டும்.நடுவில் உள்ள பெண்சிற்பம் அரசியாக இருக்க வேண்டும்.அவரின் தலைக்கு மேல் மட்டும் வெண்கொற்றைக்குடை பிடிக்கப்பட்டுள்ளது.இவ்வூரை பெண்அரசி ஆட்சி செய்திருக்க வேண்டும். அப்படி ஆட்சி செய்யும்போது ஏற்பட்ட சண்டையில் இம்மூவறும் இறந்திருக்க வேண்டும்.போரில் இறந்து போன இவர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்க வேண்டும்.மேலும் ஓரு போர் வீரர் வாளும்,கேடயத்துடன் முன்வரிசையில் நிற்கிறார்.அரசியின் பாதுகாப்பு படைவீரராக இருக்க வாய்பிருக்கிறது.இச்சிற்பங்களின் மேற்புரத்தில் சிறு,சிறு கோடுகள் நிறைய செதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது போர்நடந்த இடம் போல் காட்சி படுத்தப்பட்டுள்ளது.மேலும் இன்னோறு நடுகல்லும் இரண்டு பெண்கள் குதிரையிம் மேல் இருப்பதுபோல் சிற்பம் உள்ளது.இன்னோறுவகையில் பார்க்கும்போது விஜநகரபேரரசின் இரண்டாம் கம்பண்ணனின் மனைவி மதுரை விஜயத்தின் போது அரசனின் உடன் சென்று போரில் ஈடுபட்டதாகவும்,அப்படியும் கூட இக்கற்சிலை இருக்கலாம் என்று திரு.வீரராகவன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.திரு.Dr.பூங்குன்றன் போன்ற தொல்லியல் ஆய்வாளர்கள் பலரும் இது நடுகல்வகையைச் சார்ந்துதான் என்று குறிபிடுகிறார்.





Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

சங்க இலக்கியத்தில் விலங்குகள்

மண்பாண்ட வகைகள்