ப்ரஹ்மதேயம்
ப்ரஹ்மதேயம்
அந்தணர்களுக்கு அளிக்கப்பெற்ற இறையிலி நிலங்கள் ப்ரஹ்மதேயம் எனப்பெற்றது. இந்தச் சொல்லாட்சி அர்த்தசாஸ்த்ரத்திலும் பௌத்த நூல்களிலும் கூட பயின்று வந்துள்ளது. அர்த்தசாஸ்த்ரம் அரசன் ப்ரஹ்மதேயங்களை வழங்கவேண்டும் என்கிறது. நாகசாமி அவர்கள் ப்ரஹ்மதாயம் என்பதே சரியான சொல்லாட்சி என்கிறார். அது பொருந்தாது. ப்ரஹ்மதேயம் என்ற சொல்லாட்சியே சரியானது.
தமிழகத்திலும் இத்தகைய ப்ரஹ்மதேயங்கள் பன்னெடுங்காலமாக இலங்குகின்றன. வேள்விக்குடிச் செப்பேடு பாண்டியருள் வரலாற்று அரசர்களில் பழையோனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி நற்கொற்றன் என்னும் அந்தணனுக்கு வேள்விக்குடியை வழங்கியதாகவும் இடையில் களப்ரர் இறங்கலால் அது அற்றுப் போக நற்கொற்றன் வழியில் வந்த நற்சிங்கன் அதனைக் கேட்டுப் பெற்றதாகக் கூறுகிறது.
ஆக பொயுமு மூன்று-இரண்டாம் நூற்றாண்டுகளிலிருந்தே அந்தணருக்கு இறையிலி நிலங்கள் வழங்கப்பெற்றன எனலாம். தமிழில் முதல் நீண்ட கல்வெட்டான ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டும் ப்ரஹ்மதாயம் என்றும் ப்ரஹ்மதாய கிழவர் என்றும் குறிப்பிடுகிறது.
ஆக ஏறத்தாழ அந்தணருக்கு இறையிலி நிலங்களை வழங்குவது ஈராயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கிலிருப்பது எனலாம்.
Comments
Post a Comment