ஜாவாவின் கங்கைக் கல்வெட்டு
ஜாவாவின் கங்கைக் கல்வெட்டு
கிழக்காசிய நாடான ஜாவாவிலும் பல வடமொழிக்கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவற்றிலொன்று ஜாவாவின் மையத்தில் சோக்ரோ மாவட்டத்தில் தேச லெபக் என்னுமிடத்திலுள்ளது. அந்தக் கல்வெட்டு அங்குள்ள ஆற்றை கங்கையோடு ஒப்பிடுகிறது.
...ஸு²ச்யம்பு³ருஹானுஜாதா
க்வசிச்சி²லாவாலுகனிர்க³தேயம்|
க்வசித்ப்ரகீர்ண்ணா ஸு²ப⁴ஸீ²ததோயா
ஸம்ப்ரஸ்ருதா மேத்⁴யகரீவ க³ங்கா³
சில இடங்களில் தூய தாமரைகளோடு கூடியதும் சில இடங்களில் கற்களும் மணலும் இயைய வெளிப்பட்டவளாகவும் சில இடங்களில் பிரிந்தவளாகவும் நன்மைதரும் குளிர்ந்த நீரைக் கொண்டவளாக புனிதமாக்கும் கங்கையையொத்தவளாய்ச் செல்கிறாள்..
இந்தக் கல்வெட்டு ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்தது. பல்லவர் தம் க்ரந்த லிபியை ஒட்டிய வரிவடிவத்திலமைந்தது.
இதற்கு மேல் சங்கம், சக்ரம், சூலம், பரசு போன்ற ஆயுதங்களும் இடம்பெற்றுள்ளன.
Comments
Post a Comment