கத்தரிக்கோல்
மயிர் குறை கருவி
நாம் முடிவெட்ட பயன்படும் கத்தரிக்கோல்தான். Scissors.
இந்த சொல்லும் இந்தக் கருவியும் சங்ககாலத் தமிழர் வழக்கில் இருந்தது.
கத்தரிக்கோலை கண்டுபிடித்தது யார்.?
எப்போது பயன்பாட்டுக்கு வந்தது என்ற தேடல் ஒரு பக்கம் இருக்கட்டும்..
தமிழர்கள் சங்க காலத்திலேயே கத்தரிக்கோலை முடி வெட்ட பயன்படுத்தினார்கள் என்பதுதான் சிறப்பான விடயம்.
அதன் பெயர்தான்
" மயிர் குறை கருவி"
சங்க இலக்கியமான
பொருநர் ஆற்றுப்படை..
முடத்தாமக்கண்ணியார் பாடியது..
யாழிசைத்துப் பாடும் ஒரு பாடினியை வர்ணிக்கும் போது இவ்வாறு கூறுகிறார்..
பாடினி எவ்வாறு இருந்தாளாம்.?
கருமையான கூந்தலும் பிறைபோல் நெற்றியும் கொலை வில் போன்று வளைந்த புருவம் இனிய மொழி பேசும் செந்நிற இதழ் கொண்ட வாய், முத்துக்களை வரிசையாக அடுக்கி வைத்தாற்போல் வெண் பற்கள், மயிரை நறுக்குகின்ற கருவியின் கைப்பிடிபோல் உள்ள காதுகளில் பொலிவு பெற்ற குழைகள் ஊசலாடுகின்றன..
பாடினியின் காது
மயிர் குறை கருவியின் கைபிடிகள் போன்று இருந்ததாம்.
கத்திரிக்கோலின் கைப்பிடிபோல்
அவளின் காது நீண்டு இருந்தது.
------------------------------ --
பாடல் 25 - 30.
" அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல், கொலை வில் புருவத்து, கொழுங் கடை மழைக் கண், இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய் பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்,
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன "
------------------------------ -------
அடடா..
என்னவொறு உவமை..
நீண்ட காதுகளுக்கும்..
கத்தரிக்கோலின் கைப்பிடிக்கும்..
அதைவிட அவசியம்...
2000 ஆண்டூகளுக்கு முந்தைய சங்க காலத்திலேயே தமிழன் கத்திரிக்கோலைப் பயன்படுத்தி முடி வெட்டி சிகை அலங்காரம் செய்து கொண்டான் என்பதுதான்.
------------------
அன்புடன்..
மா.மாரிராஜன்.
Comments
Post a Comment