Posts

Showing posts from July, 2015

பரங்கிப்பேட்டை

Image
பரங்கிப்பேட்டை உருவாக்கம்       செஞ்சி மன்னன் இரண்டாம் கிருஷ்ணப்பர்  வெள்ளாற்றின் கழிமுகப் பகுதியில் கிருஷ்ணாப்பட்டினம் என்ற கடற்கரை நகரை தமது பெயரில் நிறுவினார். அங்கு புதிய மக்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தினார். அந்நகரே இன்று பரங்கிப்பேட்டை என அழைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியில் விவசாயம் பெருக புதிய நீர் நிலைகளையும் மக்களுக்காக  ஏற்படுத்தி தந்தார். சோழ மன்னனால் கடலில் வீசப்பட்ட சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளைப் போன்ற சிலையை வடித்து அதை மீண்டும் அக்கோயிலில் பிரதிஷ்டை செய்தான். தில்லை தீட்சதர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே நிறுவப்பட சிலைதான் தற்போதுள்ள கோவிந்தராஜர் சிலையாகும். மேலும் தாம் உருவாகிய கிருஷ்ணப்பட்டினத்தில் கி.பி.1623 ஆம் ஆண்டு முதல்  டச்சுகாரர்கள் வாணிபம் செய்து கொள்வதற்கான அனுமதியையும் வழங்கினார்.

பரங்கிப்பேட்டை

Image
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்ட இரும்பு தொழிற்சாலையில் பணியின் போது விபத்தில் இறந்த தொழிலாளர் '' இராபர்ட் உட் '' என்பவற்றின் கல்லறை. இங்கு தயாரிக்கப்பட்ட இரும்பு பொருட்கள் இந்தியாவில் மட்டுமன்றி லண்டன் நகரிலும் பாலங்கள் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன பெயர்கள் பொறிக்கப்பட்ட இந்த இரும்பு தகட்டை திருடி குடிப்பிரியர்கள் விற்றுவிடுவதாக கூறுகின்றனர். தற்போது இந்த ஒரு தகடு மட்டுமே உள்ளது.

பரங்கிப்பேட்டையில் ஹைதர் அலி

Image
கடலூர்  மாவட்டம் பரங்கிப்பேட்டையில்  ஹைதர்  அலிக்கும்  ஆங்கிலேய  தளபதி  சர் அயர்குட்டுக்கும் இடையே  கி.பி.  1781 ஆம் ஆண்டு  சூலை 1 ஆம் தேதி மைசூர் போர் நடைபெற்றது.  ஹைதர் படை தோல்வியுற்றது . அப்போது  ஆங்கிலேய படைகளின்  தாக்குதலில்  இருந்து  தங்களை  பாதுகாத்து  கொள்வதற்காக  ஹைதரின்  வீரர்களில் சிலர்   போர்க்களதின் அருகே இருந்த அமிர்த கடேஷ்வரர்  கோயிலில் சென்று பதுங்கி  கொண்டனர். இதனை  அறிந்த  அயர்குட்  அக்கோயிலில் மீது  துப்பாக்கி  மற்றும்  பீரங்கி கொண்டு தாக்குதல் நடைபெற்றது. அந்த கோர தாக்குதளின் சுவடுகள் இன்றும்  அந்த  கோயிலில் காணப்படுகின்றன

''MADE IN PORTNOVA'

Image
கடலூர் மாவட்டம்  பரங்கிப்பேட்டையில்  கடந்த  ஆறு  நாட்களாக  ஆய்வு  பணி........  ஆங்கிலேயர் காலத்தில் சேலம் கஞ்சன் மலையில் இருந்து  கொண்டுவரப்பட்ட தரமிகுந்த இரும்பு தாதை  பரங்கிப்பேட்டையில் இருந்த  தொழிற்சாலையில்  உருக்கி  கட்டுமானங்களுக்கு  பயன் படுத்தி கொண்டனர். இங்கு  தயாரிக்கப்பட்ட  இரும்பு தூண்கள்  ''MADE  IN  PORTNOVA''  என்ற சின்னத்தோடு சென்னை எழும்பூர்  இரயில் நிலையத்தில் இன்றும்  பார்க்கலாம். படம் ..... ஆங்கிலேய ஆட்சியில்  துறைமுகத்திற்காக  அமைக்கப்பட்  இரும்பு தூண். நூற்றாண்டுகள் கடந்தாலும்  உப்பு நீரால்  அறிக்கப்படாமல்  உள்ளது. தமிழக இரும்பு  தாதின்  வளிமைக்கு இதுவே தக்க சான்று.