பரங்கிப்பேட்டை
பரங்கிப்பேட்டை உருவாக்கம்
செஞ்சி மன்னன் இரண்டாம்
கிருஷ்ணப்பர் வெள்ளாற்றின்
கழிமுகப் பகுதியில் கிருஷ்ணாப்பட்டினம் என்ற கடற்கரை நகரை தமது பெயரில் நிறுவினார்.
அங்கு புதிய மக்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தினார். அந்நகரே இன்று பரங்கிப்பேட்டை
என அழைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியில் விவசாயம் பெருக புதிய நீர் நிலைகளையும்
மக்களுக்காக ஏற்படுத்தி தந்தார். சோழ
மன்னனால் கடலில் வீசப்பட்ட சிதம்பரம் கோவிந்தராஜ
பெருமாளைப் போன்ற சிலையை வடித்து அதை மீண்டும் அக்கோயிலில் பிரதிஷ்டை செய்தான்.
தில்லை தீட்சதர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே நிறுவப்பட சிலைதான்
தற்போதுள்ள கோவிந்தராஜர் சிலையாகும். மேலும் தாம் உருவாகிய கிருஷ்ணப்பட்டினத்தில் கி.பி.1623
ஆம் ஆண்டு முதல் டச்சுகாரர்கள் வாணிபம்
செய்து கொள்வதற்கான அனுமதியையும் வழங்கினார்.
தயவுசெய்து வரலாற்று ஆதாரங்களையும் பதிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்
ReplyDelete