பண்டையகால தமிழர்கள் வகுத்த தேர்தல் சட்டங்கள்
பண்டையகால தமிழர்கள் வகுத்த தேர்தல் சட்டங்கள் முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் , உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை. உலக வரலாற்றிலேயே தங்களை ஆலப்போகும் தலைவன் தூய்மையானவனாக, மக்கள் நலனில் அக்கரை உள்ளவனாக, தலைமைப் பண்பிற்கு உகந்தவனாக இருப்பவனையே அக்கால தமிழர்கள் தலைவனாக ஏற்றனர். இன்று சில உலக நாடுகள் தலைமைக்கும், அரசுக்கும் இலக்கணங்களை வகுத்தளித்த பெருமைக்குறியது எங்கள் தேசம் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் அத்தேசங்களில் வாழ்ந்த மானுடம் நாகரிகத்தை எட்டும் முன்பாகவே, தமிழர்கள் உயரிய நாகரிகத்தோடு வாழ்ந்த பெருமைக்குரிவர்கள். மேலும் தாங்கள் பேசும் மொழிக்கு மட்டும் இலக்கணத்தை வகுத்ததோடு அல்லாமல் தங்களை ஆளப்போகும் தலைமைக்கும் சேர்த்து இலக்கணத்தை வகுத்த பெருமை தமிழற்கேவுறியது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் ஒரு நாட்டின் தலைவன் அந்நாட...