திருத்துறையூர் - சிஷ்ட குருநாதேஸ்வரர் திருக்கோயில்
திருத்துறையூர் - சிஷ்ட குருநாதேஸ்வரர் திருக்கோயில்
கடலூர்
மாவட்டம், பண்ருட்டியில் இருந்து வடக்கே சுமார் 6 கி.மீ தூரத்தில் திருத்துறையூர்
கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரின் மையப் பகுதியில் சிஷ்ட்ட குருநாதேஸ்வரர் உடனுறை
சிவலோகநாயகித் திருக்கோயில் அமைந்துள்ளது. இருபத்திரண்டு நடுநாட்டு சிவத்தலங்களில்
இதுவும் ஒன்று. மேற்கு நோக்கிய வண்ணம் இக்கோயில் அமைந்துள்ளது. அம்பாள் சன்னதி
வடக்கு நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சூரியன் இராமன் , பீமன் போன்றோர் பூஜை
செய்த பூஜை செய்த ஸ்தலம். சுந்தரரால் பாடல் பெற்ற பெருமைக்குரியது இக் கோயில்.
தலவரலாறு
கைலாயத்தில் சிவன் பார்வதி தேவியின்
திருமணம் நடைபெறும் போது அகத்திய மாமுனிவர் தென்னகம் நோக்கி வந்ததார நேரிட்டது.
இதனால் சிவபிரானின் திருமண காட்சியை தம்மால்
காணமுடியாமல் போய்விடுமோ என வேதனைப்பட்டார். இதனால் அகத்தியர் திருத்துறையூர்
வந்தவுடன் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தமக்கு திருமணக்கோலத்தை
காண்பிக்குமாறு வேண்டி வழிபட்டார். உடனே சிவபிரான் பார்வதி தேவியுடன் தமது
திருமணக்கோலத்தில் அகத்திய மாமுனிக்கு காட்சி தந்த சிறப்பு வாய்ந்தது இக்கோயில்.
இன்றும் திருணமனத் தடை உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்தாள் திருமணத் தடை நீங்கும்
என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு உள்ளது.
தலத்தின் பெருமை
திருநாவலூரில் பிறந்த வரான
சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒருமுறை
திருத்துறையூர் பெருமானை நேரில்காண திருத்துறையூர் நோக்கி வந்தார். அப்போது
பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சிஷ்ட்ட குருநாதேஸ்வரரை வங்க முடியாத
சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது வயதான தம்பதிகள் இருவர் சேர்ந்து சுந்தரரை படகில் ஏற்றி
மறுகரையில் கொண்டு வந்து விட்டவுடன் திடிரென்று மறைந்து கொண்டனர். தம்மை
கரைசேர்த்த தம்பதியினர் காணமல் போனதால் வேதனை பட்டார் சுந்தரர். இதனை
மறைந்திருந்து பார்த்த முதியவர்
சுந்தரர்ரிடம் வந்து நீங்கள் தேடுபவர் அதோ மேலே இருக்கிறார் பாருங்கள்
என்று கூறி மறைந்து விட்டார் . வானத்தில் சிவன் பார்வதி இருவரும் ரிஷப வாகனத்தில்
அமர்ந்தவாறு சுந்தரர்க்கு காட்சியாளித்தனர். சுந்தரர் சிவபிரானிடம் தமக்கு உபதேசம்
செய்யும்படி கூறினார். எனவே சிவன் சுந்தரருக்கு குருவாக இருந்து தவநெறி உபதேசம்
செய்தார் . இதனால் திருத்துறையூர் பெருமானை சிஷ்ட்ட குருநாதேஸ்வரர் என்று அழைக்கலாயினர்.
சிவன் இங்கு குருவாக இருந்து மக்களுக்கு அருள் செய்து வருவதால் வியாழக் கிழமையன்று
இக்கோயிலில் விசேஷ வழிபாடு நடக்கிறது. கல்வியறிவில் குறைபாடு உடையவர்கள் இப்பூஜையில் கலந்து கொண்டால்
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது. மேலும் சித்திரை மாதம் முதல்
வாரத்தில் மாலை வேளையில் இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி
விழுகிறது.
Comments
Post a Comment