பெருமாள் ஏரி
முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் உதவிப் பேராசிரியர் அரசு கலைக் கல்லூரி ஆத்தூர். குறுநில மன்னன் வெட்டிய பெருமாள் ஏரி கடலூர் மாவட்டம் சுமார் சுமார் பத்தாயிரம் ஆண்டுகால வரலாற்று சிறப்பை கொண்ட பகுதியாகும். சங்ககால முதல் கிரேக்கர்கள் , ரோமானியர்கள் , அரேபியர்கள் , சீனர்கள் போன்றோர் இம்மாவட்டத்தில் உள்ள மக்களுடன் நேரடி வணிகதொடர்பை கொண்டிருந்தனர் என்பதற்கு ஏராளமான தொல்லியல் சான்றுகள் கடலூர் மாவட்டத்தில் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கடல் மார்க்கமாக முதன்முதலில் வர்த்தகம் செய்ய வந்தவர்கள் போர்ச்சிகீசியர்கள் மற்றும் டச்சுகாரர்கள் ஆவர். ஆனால் கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமது ஏகாதிபத்திய கொள்கையினால் கடலூர் பகுதி முழுவதையும் தமது வாணிப ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகள் கடலூ...