அச்சுத மங்கலம் கல்வெட்டுக்கள்....

           அச்சுத மங்கலம் கல்வெட்டுக்கள்....

                  Dr J.R.SIVARAMAKARISHNAN

          பண்டையத் தமிழார்தம் வரலாறு , பழக்க வழக்கங்கள் , பண் பாடு ,  வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ள தற்கு தொல்லியல் சான்றுகள் எவ்வாறு உதவி புரிகின்றனவோ அதே போல் கல்வெட்டுக்களும் அக்கால வினோத நிகழ்வுககளை படம்பிடித்து காட்டும் கண்ணாடிகலாகவும் விலங்குகின்றான. அப்படிப்பட்ட கல்வெட் டுக்களில் கற்பனைக்கோ , கட்டுக்கதைகளுக்கோ இடமில்லை எனலாம். அவற்றில்  உள்ளதை உள்ளவாறு உணர்த்துகின்ற உண்மைக்கு மட்டுமே இடமுண்டு. அந்த அடிப்படையில் பண்டைய காலத்தில் அரசு எடுத்த முடிவில் மக்களின் நலன் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடது என்ற அறக் கோட்பாட்டானது எவ்வாறு பின்பற்றப்பட்டுள்ளது என்பதை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள அச்சுத மங்கலம் என்ற ஊரில் உள்ள சோமனாதசுவாமி கோயில் கல்வெட்டின் வாயிலாக அறியமுடிகிறது.

பெருவழிகள்

       தற்காலத்தில் அரசு  தேசநல பணிகளுக்காகா மக்களின் சொந்த உடைமைகளான நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளை நினைத்த மாத்திரத் தில் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்றாகும். இதில்  உடைமை களை இழந்த மக்களின் நலன் காக்கப்படுவது இல்லை. உதாரண மாக ஒரு விவசாயி நாட்டு நலனுக்காக தமது விலை நிலங்களை சாலை விரிவாக்கத் தின் போதோ அல்லது புதிய அணைகள் காட்டப்படும் போதோ அல்லது புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் போதோ இழக்கப்படும் பச்சத்தில் அந்த விவசாயி திடீர் என்று தமது தொழிலை இழந்து அரசு தரும் சொர்ப்பப்பனத் தில் தமது முழு வாழ்வாதாரத்தை இழந்து சொந்தநாட்டில் அகதியாக வாழவேண்டிய சூழளுக்கு தள்ளப்படுகிறான். இதே போன்று சாலை விரிவாக் கங்களின் போது எத்தனையோ வியாபாரிகளின் கடை மற்றும் மனைகளை அரசு கையகப் படுத்துவதினால் அவர்களின் வர்த்தக வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டு எத்தனையோ வணிகர்கள் தமது தொழிலையே விட்டுவிட்டு சென்ற அவலமும் இந்த தேசத்தில் உண்டு . சில நேரங்களில் பெரியப்பெரிய ஊர்களும் அரசால் கையகப்படுத்தும் போது அவ்வூரில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து மக்களின் நலனில் அக்கறை காட்டாமல் அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் போது மக்களின் அவர்களின் வாழ்வாதார அலகுகளான அத்தியாவசிய தேவைகள் அங்கு பின்பற்ற படாமல் குடிய மர்த்தப்படுவதால் மக்கள் தவறான பாதைகளுக்கு செல்லக்கூடிய சுழல் ஏற்படுகிறது. இந்த குளறுபடிகளுக்கு காரணம் அரசு  மற்றும் அரசியல் வாதிகளின் பொறுப்பற்ற அடாவடித்தன்மையேயாகும். இதில் மக்களின் நலன் காக்கப்படுவது இல்லை. ஆனால் பண்டைய காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த தமிழ் வேந்தர்கள் புதிய  குடியேற்றங் களை மேற்கொள்ளும்போது முன்பு பிருந்த பகுதியில் அவர்கள் அனுபவித்து வந்த அத்தனை வசதி களையும் செய்து கொடுத்துள்ளனர்.

 

அச்சுத மங்கலம் கல்வெட்டு

 
        திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள அச்சுத மங்கலத்தில் சோமனாத சுவாமி கோயில் அமைந்துள்ளது . இக் கோயிலில் முப்பது கல்வெட்டுக்கள் உள்ளன. இவைகளில் பெரும்பாலானவை  சோழர் காலத்தை சார்ந்தவைகளாகும். குறிப்பாக சோழப்  பேரரசின் இறுதிக் காலத்தை சார்ந்த மன்னர்களின் காலத்தவை. குறிப்பாக வீரராஜேந்திரன் சோழன் , மூன்றாம் குலோத்துங்க சோழன் , மூன்றாம் இராசராச சோழன் ஆகியோர் காலத்தில் வெளியிடப்பட்டவைகளாகும். இக்கல்வெட்டுக்களின் வாயிலாக அக்காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி அறியமுடிகிறது. குறிப்பாக கி.பி. 1237 ஆண்டு வெளியிடப்பட்ட மூன்றாம் குலோத்துங்க சோழனின் 21 ஆம் ஆட்சியாண்டை சார்ந்த இரண்டு கல்வெட்டுகள் இவ்வூரிலுள்ள சோமனாத சுவாமி கோயிலின் முதல் பிரகாக் கிழக்குச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன . இவை பதினாறு வரிகளைக் கொண்டவை.  இக் கல்வெட்துக்களின் வாயிலாக அக்காலத்தில் சாலைகள் விரிவாக்கத்தின் போது கடைபிடிக்கப்படுள்ள விதிமுறைகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது சோமனாத சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களின் போது வெளியூர்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவதாலும் , சுவாமி திருவுலா செல்கின்ற போது இவ்வூரின் தெருக்களின் அகலம் போதாமையால் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளானார்கள். இதனை சரிசெய்ய நினைத்தது அரசு. தெருக்களின் சாலைகளை அகலப்படுத்தும் போது வீட்டு மனை மற்றும் கடைமனைகள் அதிகம் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு அதிகாரியிடம் முறையிட்டனர் . அவற்றை விசாரித்த அதிகாரிகள் சில விதிமுறைகளை மக்களிடம் கூறினார் . அதனை ஏற்ற மக்கள் திருப்தி அடைந்தனர். அதாவது சாலை விரிவாக்கத்தின் போது மனைகளை இழந்தோருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் புதியதாக ஏற்படுத்தப் படுகின்ற இரண்டாம் தெருவில் குடியமர்தப்படும். மேலும் பழைய தெருவில் மனைகள் வாங்கியிருந்த வியாபாரிகளுக்கு அதே விலையில் புதிய இரண்டாம் தெருவில் மனைகள் ஒதுக்கப்பட்டன . அதோடு மட்டுமல்லாமல் புதிய மனைகள் வாங்குவதாயின் புதியதாக நிச்சயிக்க பாட்டுள்ள விலையினை கொடுத்து அவ்வூரைச் சார்ந்த யார் வேண்டு மானாலும் வாங்கிக் கொள்ளலாம். விற்க நினைத்தால் அரசு நிர்மாணித்துள்ள அதே விலையில் விற்றுக் கொள்ளவும் அரசு அதிகாரிகளால் வழிவகைச் செய்யப்பட்டது. மேலும் புதியதாக பெற்ற மனைகளை விற்கவும் , பிற மாற்றங்களை செய்து கொள்ளவும் பதிக்கப்பட்ட மக்களுக்கு முழு சுதந்திரமும் அரசால் வழங்கப்பட்டிருந்தது.
            அதாவது அச்சுத மங்கல தெருக்கள் விரிவாக்கத்தில் பாதிக்கப் பட்டுள்ள மக்களின் நலன் பிரதானமாக அரசால் கருத்தில் கொள்ளப்பட் டுள்ளதை இந்த இரு கல்வெட்டுச் செய்திகள் மூலம் அறியமுடிகிறது. மேலும் பாதிக்கப்பட்ட வர்களின் நில உரிமை முழுவதும் பாதுகாக்கப் பட்டுள்ளதை பார்க்கும் போது அக்கால மன்னன் மற்றும் அரசு அதிகாரிகளின் மக்கள் நலனில் அவர்கள் கொண்டிருந்த அக்கறையின் சிறப்பு தன்மை பாராட்டுக் குறியதாக உள்ளது. நமது முன்னோர்களின் பெருமைகளை மட்டும் பேசினால் போதாது அவர்கள் மேற்கொண்ட மக்கள் நலன் நடவடிக்கை களையும் பின்பற்றுதல் இன்றைய ஆட்சியாளர்கள் , அரசு அதிகாரிகளின்  தார்மிகக் கடைமையும் கூட .


நீதிபரிவர்த்தனை         

       
              கல்வெட்டுக்களில் கற்பனைக்கோ , புனைந்துரைக்கோ , கட்டுக்கதை களுகோ , உணர்ச்சியான நடைக்கோ , உன்னதமான வடிவமைப்புக்கோ இடமில்லை . அவற்றில் உள்ளதை உள்ளவாறு  உணர்த்துகின்ற உண்மைக்கு மட்டுமே இடமுண்டு என்பதை அச்சுதமங்கலம் கல்வெட்டு வலியுறுத்து வனவாக விளங்குகின்றன. உதாரணமாக மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குப் பிறகு கி.பி. 1216 ஆண்டு சோழ அரசின் மன்னனாக அரியணையேறியவன் மூன்றாம் இராசராச சோழனாவான். இவ்வேந்தனது ஆட்சிகாலத்தில்தான் சோழப்பேரரசு அழிவின் விளிம்பிற்கே சென்றது. காரணம் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் தாம் பதவி யேற்ற பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் சோழநாட்டின் மீது இருமுறை நிகழ்த்திய படையெடுபுகளும். பிற்கால பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் மற்றும் மகத நாட்டு குறுநில மன்னனான வாணகோவரையனின் எழுச்சி  போன்றவற்றால் சோழப்பேரரசு அழிவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதற்கு காரணம் மூன்றாம் இராசராச சோழனின் இயலாமையேயாகும். சரியான ஆளுமைத்திறன் இல்லாத தலைமையை பயன்படுத்தி குறுநில மன்னர்கள் துண்டிவிடப்பட்ட கலகங்களால் மக்கள் வாழ்க்கையில் அச்சத்தையும் , அமைதியின்மையையும் உள்நாட்டில் உண்டு பண்ணிவிட் டன. இதனால் சோழ நாட்டில் இராசத்துரோகம் , நாட்டுத்துரோகம் , நீதி வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகள் போன்றவற்றால் குற்றங்கள் மலிந்து காணப்பட்டன.
         ஒருமன்னனிடம் தலைமைப் பண்பில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும் பட்சத்தில் அவனது கீழ் பணியாற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதற்கு, சோமனாத சுவாமி கோயிலின் முதல் திருசுற்றின் கிழக்குபுற சுவரில் கி.பி. 1236 ஆண்டு வெளியிடப்பட்டுள்ள மூன்றாம் இராசராச சோழனின் இருபதாம் ஆட்சியாண்டு கல்வெட்டே தக்க சான்றாகும்.
           அதாவது சோமநாத சதுர்வேதிமங்கலத்து ஊரார்க்கும் சீதக்க மங்கலத்து ஊரார்க்கும் இடையே முடிகொண்ட சோழப் பேராற்றில் இருந்து தண்ணீர் பாச்சுவதில் தகராறு ஏற்பட்டது. இந்த இரு ஊராரின் தகராறுக்கு  உடையோனான இராஜராஜப் பேரையன் என்பவனே காரணம் என்று குற்றம்  சாட்டப்பட்டு தண்டிக்கப்படுகிறான். இதனால் இராஜராஜப் பேரையனின் மகனுக்கு உதிரப்பட்டியாக நிலம் கொடுக்கப் பட்டுள்ளதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆனால் உண்மை குற்றவாளிக்கு பதிலாக சபையோரின் தவறுதலான தீர்ப்பால் தப்பிக்க விடப்பட்டு இராஜராஜப் பேரையன் என்ற அப்பாவி தண்டிக்கப்பட்டுள்ளதை கல்வெட்டில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. இதில் அப்பாவி குடிமகன் தண்டிக்கப்பட்டு இறந்திருக்கிறான்.
            பாசுவிற்கு தம் மகனால் தீங்கு ஏற்பட்டு விட்டதே என்ற ஒரே காரணத்தால் தமது மகன்னென்றும் பாராமல் தவறு யார் செய்தாலும் நீதியின் முன் அனைவரும் சமம் என்ற பரம்பரையில் வந்த மூன்றாம் இராசராச சோழனது ஆட்சிகாலத்தில் நிரபராதி தண்டிக்கப்பட்டுள்ளதை அச்சுபிசகாமல் அப்படியே பதிவுபடுதப்படுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தம்மையே விற்று அடிமையானது


            இதே மன்னனது ஆட்சிகாலத்தை சார்ந்த மற்றொரு கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. அதில் சண்டேஸ்வரப் பெருந்தச்சன் என்பவன் தமது மனைவி , நான்கு ஆண்மகன்கள் மற்றும் தமது ஒரேமகள் , தம்மையும் விற்றுக்கொண்டு அடிமையான செய்தி கூறப்பட்டுள்ளது. 


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி