இந்திய தொல்பொருள் துறையின் திருச்சி வட்டம்

ந்திய தொல்பொருள் துறையின் திருச்சி வட்டம் ( CIRCLE ) தொடங்கப்பட வேண்டும் ஆய்வாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை

   Dr J.R.SIVARAMAKARISHNAN

                     

  இந்திய தொல்பொருள் துறை தென்னிந்தியாவில் உள்ள நமது பாரம்பரி யம் மிக்க புரதான சின்னங்களை புதுப்பித்தல் மற்றும் மீட்டெடுத் தலுக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரலாற்று பெருமைமிக்க இடங்களை தேர்வு செய்து அவைகளை தமது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து பாதுகாத்து வருகிறது. மேலும் நிர்வாக நலனுக்காக பல வட்டங்களாக பிரித்து தமது பணியை செவ்வன செய்துவருகிறது. குறிப்பாக கர்நாடக மாநி லத்தில் இந்திய தொல்பொருள் துறையினர் 747  இடங்களை பாரம்பரி யம் மிக்க இடங்களாக தேர்வு செய்து அவைகளை இரண்டு வட்டங்களாக பிரித்து பாதுகாத்து வருகிறது . இதற்காக பெங்களூர் வட்டத்தில் உள்ள 207 பாரம்பரியம் மிக்க வரலாற்று சின்னங்களை புதுப்பித்தல் மற்றும் மீட்டெ டுத்தல் பணிக்காக ஆண்டு ஒன்றிற்கு எட்டு கோடி ரூபாய்யும் , தார்வாடு வட்டத்தில் உள்ள 299 வரலாற்று சின்னங்களை பாதுகாக்க எட்டு கோடி ரூபாயும் ஆகமொத்தம் 16  கோடி ரூபாய் ஒதுக்கி வருகிறது. 
         
  தற்போது கர்நாடக அரசு மத்திய அரசை வளியுறுத்தி ஹம்பியை தலை மையிடமாகக் கொண்டு தனி வட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலமாக ஆண்டு ஒன்றிற்கு எட்டு கோடி ரூபாய் ஆகா ஆண்டிற்கு 24  கோடி நிதியை பெறவுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் உள்ள யுனஸ்கோவால் அங்கிகரிக் கப்பட்ட உலகப் பாரம்பரியம் சின்னங்களுக்கென ஆறு கோடி ரூபாய் நிதி யையும் அம்மாநிலத்திற்கு கிடைப்பது கூடுதல் பலமாகும். இந்த அதிகப் படியான நிதியின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள ஹம்பி போன்ற இடங் களை காணவரும் சுற்றுலாப்பயணிகளின் நலனுக்காக அடிப்படை வசதி களான சுற்றுசுழல் பாதிபில்லா வகையில் பேட்டரியால் இயங்கும் கார்கள் , சுத்தமான குடிநீர் , உணவு விடுதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி சுற்றுலா வின் மூலம் அதிக நிதியை பெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஐதரா பாத்தை தலைமையிடமாக கொண்டு இந்திய தொல்பொருள் துறை தமது கீழ் உள்ள 37 பாரம்பரியம் மிக்க வரலாற்று சின்னங்களை பாதுகாக்க ஆண்டு ஒன்றிற்கு இரண்டு கோடி ரூபாய் பெற்று வந்தது. ஆனால் தற் போது தெலுங்கான , ஆந்திர பிரசதேசம் என்று பிரிக்கப்பட்டதால் தெலுங் கான முதல்வர் மத்திய அரசின் உதவியுடன் தமது மாநிலத்திற்கென இந் திய தொல்பொருள் துறையின் தனி வட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கென இரண்டு கோடி ரூபாய் நிதியை பெற நடவடிக்கை எடுத்துள்ளது. இதே போன்று தமிழ் நாட்டில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 403 இடங்களில் உள்ள பாரம்பரியம் மிக்க சின்னங்களை பாதுகாத்து வருகிறது. இதற்கென ஆண்டு ஒன்றிற்கு வெறும் ஐந்து கோடி ரூபாய் வழங்கப் படுகிறது. 

  இதில் கேரளாவில் உள்ள திருச்சூர் வட்டத்தில் உள்ள 13 பாரம்பரிய சின் னங்களுக்கான நிதியையும் சென்னை வட்டத்தின் மூலமே செலவு செய் யப்படுவது குறிப்பிடத்தக்கது. மற்ற மாநிலங்களான ஆந்திரா , தெலுங்கான , கர்நாடக மாநிலங்களுக்கு கிடைக்கக்கூடிய நிதியைக் காட்டிலும் இது மிக வும் குறைந்ததாகும். இந்த குறைந்த நிதியை வைத்துக்கொண்டு பண்டைய தமிழர்களின் பாரம்பரிய மிக்க சின்னங்களை புதுப்பிக்கவும் மற்றும் மீட்டெ டுத்தல் மேலாண்மைக்கும் இவை போதுமானதாக இல்லை. மேலும் சென் னை வட்டத்தில் பணிபுரியும் தற்காலிக காவலர்கள் மற்றும் பணியாளர் களுக்கு சரியாக சம்பளம் வழங்கவும் முடியாமலும் தினரிவருவது வேத னைக்குறிய ஒன்றாகும். எனவே இந்த சிக்கல்களை நிரந்தரமாக போக்க வேண்டும் எனில் இந்திய தொல்பொருள்துறையின் சென்னை வட்டத்தை இரண்டாக பிரித்தால் மட்டுமே சாத்தியமாகும். குறிப்பாக சேலம் , தஞ்சை , திருமயம் , திருச்சி போன்ற சிறு தொல்லியல் வட்டங்களை உள்ள 140 புரதான சின்னங்களையும் , மூன்று யுனஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரிய சின்னங்களான தஞ்சை பெரியக்கோயில் , கங்கை கொண்ட சோழபுரம் கோயில் , தாராசுரம் கோயில் ஆகிய மூன்றும் ஆக மொத்தம் 143 பாரம்பரிய சின்னங்களை ஒன்றிணைத்து திருச்சியை மைய மாக வைத்து இந்திய தொல்லியல் துறையின் தனி வட்டம் மொன்றை ஏற்படுத்தி அதன் மூலம் அதிகப்படியான நிதியை பெறமுடியும். மேலும் ஆதிச்சநல்லூர் , பூம்புகார் , கங்கைகொண்ட சோழபுரம் , தஞ்சாவூர் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் கீழடி போன்ற மிகபெரிய அகழாய் வுகள் நடத்தப்படுவதற்கு வசதிவாய்ப்புகளை ஏற்படுத்த எதுவாக இருக்கும் . மேலும் இந்திய வரலாற்றில் 399 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமை சோழர் களையே சாரும் அவர்களின் தலைநகரங்களான பழையாறை , தஞ்சாவூர் , கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் பெரும்பரப்பு அகழாய்வை எதிர்காலத்தில் இந்திய தொல்பொருள்கள் துறையினர் நடத்த எதுவாக இருக்கும். மேலும் கர்நாடக மக்கள் மாநிலக் கட்சிகளை விடுத்தது மைய கட்சிகளை ஆதரிப்பது அம்மாநிலம் பண்பாட்டுத்துறைக்கு அதிக நிதியை பெறுவதற்கு காரணமாகும். இதன் வாயிலாக அம்மாநிலத்தில் உள்ள பண் பாடு சின்னங்கள் பாதுகாப்பு , அதன் வாயிலாக சுற்றுலா வளர்ச்சி மேன்மை அடைகிறது. இதன் மூலம் அதிக நிதியை பெற்று வருகிறது.     

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு