கலியூர்
கலியூர் விக்கிரம சோழன் உலாவில் , இராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு போர்பற்றிய இருவரிகள்.. ! “ தூதர் காப்புண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும் கொண்டு , மலைநாடு கொண்டோனும்.. “ காவிரியின் வலக்கரையான கலியூர் என்னுமிடத்தில் , கங்கர் படைக்கும் , சோழர் படைகளுக்கும் இடையேயான போர். தமது தலைநகரான தலைக்காடு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த கங்கர்படை , சிறைபிடிக்கப் பட்டிருந்த தமது தூதன் ஒருவனை காக்க குடமலைநாடு நோக்கிப் பயணித்த சோழர் படையினை , இடையே தடுத்தி நிறுத்திய போர். சோழர் படையின் தளபதியாக அப்ரமேயன் , இப்போரில் தான் கொன்றதாகக் கூறும் பதினெட்டு தளபதிகளின் பேரையும் , பட்டியலிட்டு வைத்துப் போயிருக்கிறான் தமது கல்வெட்டில். ( படம் கீழே ) மேற்கூறிய விக்கிரம சோழனுலாவில் காணப்படும் வரிகளில் உள்ள சுரம் என்னும் வார்த்தை ‘ காடு ’ என்ற பொருள்கொள்ளப்பட்டு , ஈரொன்பது , அதாவது பதினெட்டு காடுகளை ஒரே பகலில் கடந்தது சோழர் படை என்று பொருள்கொள்ளப் பட்டிருந்தது முன்பு. இக்கல்வெட்டு கிடைத்தபின் , சுரம் என்ற வார்த்தை , காட்டினை மட்டுமல்ல.. சிரமாகிய தலையினையும் குறிக்கும் என்பது தெளிவாக விளங...