சைந்தவர்கள்

 



தென்கிழக்கு பகுதியான குஜராத்தை ஆண்டவர்கள் சைந்தவர்கள்.

 

சிந்துநதிபுரத்திலிருந்து வந்ததால் சைந்தவர்கள் என்று அழைக்கப்பட்ட  இவர்கள்  மகாபாரத்தில்  அபிமன்யு சாவுக்கு காரணமான ஜெயத்ரதனின் அதே சைந்தவன் குலம்தான்  

இவர்களை ஜயத்ரதர்கள் என்றும் அழைப்பதுண்டு ..

 

பொது யுகம் 735 லிருந்து 920 வரை 12 சைந்தவ அரசர்களின் விபரங்கள் ஆவணமாக கிடைக்கிறது.  

 

இப்போது கௌமிலி என்றழைப்பப்படும் பௌதாம்பிகா  இவர்களது தலைநகரம் .

 

அந்த காலத்திலே கடல் வாணிபம் செய்து வந்தார்கள்.

 

செழிப்பான இந்த பிரதேசத்தில் நுழையவேண்டுமானால் சிந்துநதி மன்னர்களை வீழ்த்தி  வரவேண்டுமாதலால்    சுலபமாக கடல் வழியாக சென்று குஜராத்தை பிடித்துவிடலாமென்று எண்ணமிட்டார்கள் அரேபியர்கள்.

 

அலி மஹித்தி என்ற காலிபாத்தின் கட்டளை ஏற்று சிந்து  கவர்னரான ஹாசன் தனது தளபதி அமரூபன் ஜலால்  தலைமையில் ஒரு பெரும் கடற்படையை அனுப்பினார் .. சைந்தவ தேசத்தை கடல்வழியாக தாக்கி பிடிக்க.. 

 

போரை எதிர்பாராத  துறைமுகம் வழக்கமான வியாபார வேலைகளில் ப்ரியமாக ஈடுபட்டிருந்தது. 

 

பெரும் கப்பல்களிலிருந்து  பொருட்கள் இறங்குவதும்  ஏறுவதுமாக இருந்த வணிகர் கூட்டத்தை கண்டதும் நாக்கில் எச்சில் ஊர அரேபிய கப்பல் படை "  கூச்சலுடன் துறைமுகத்தில் நுழைந்து எரி அம்புகளை வீச  ஆரம்பித்தது 

 

சிவ பக்கதர்களான சைந்தவர்களின் இன்னொரு பக்கம் தெரியவில்லை அரேபியர்களுக்கு 

 

கண நேரத்தில் வணிக கப்பல்கள் அனைத்தும் ராணுவ கப்பல்களாக  மாற, பாய்மரங்கள் இறக்கப்பட்டு, பாய்மர மேடைகளில் தோன்றிய முப்புரம் எரித்த சிவனின் பக்தர்கள்  பதிலுக்கு அம்புமாரி பொழிந்தார்கள் . 

 

அதில் கவனம் தவறிய அரேபியர்களை வியாபாரிகளாயிருந்த திடீரென வீரர்களாக மாறிய கூர்ஜர வீரகள் கப்பல் தளங்களிலிருந்து தளத்தை உடைக்கும் கடப்பாரை போன்ற ஆயுதங்கள் வீச  பாய்மர மேடையில் நின்றவர்களுடன் தளம் விழுந்தவர்களும்  சேர்ந்து  கடல் மீன்களுக்கு இரையாகினர்..

 

அரபிய கப்பல்கள்  கொஞ்சம் சுதாரித்து தளங்களில் வீரர்களை தயாராக்க ...

 

அடுத்த ஆபத்து வந்தது...

 

கடலில் கலக்கும் நதியின்  முகதுவாரத்திலிருந்து புறப்பட்ட சின்ன படகுகளின் அணி  எறும்புகள்போல சாரை சாரையாக கடலுக்குள் வந்து அரபு கப்பல்களை சூழ்ந்துகொள்ள...எறியப்பட்ட கனரக ஆயுதங்கள் அரேபிய கப்பல்களின் கீழ்ப்பகுதிகளை தர்க்க, தலை நீட்டியவர்களின் தலைகளை கூர்ஜர அம்புகள் பதம் பார்க்க, கடல்நீர் நுழைந்து மழமழவென கப்பல்கள் மூழ்க ஆரம்பித்து.

   

மடமடவென துடுப்புக்களை துளாவி  அதிவேகமாக துறைமுகத்தைவிட்டு ஓட தொடங்கின  அரேபிய கப்பல்கள் ...

 

வந்ததில் பாதி கப்பல்களோ பாதி  படைவீர்களோ கூட  திரும்பி செல்லவில்லை. 

 

சித்து கவர்னரும் 

காலிபாத்தும் பிரம்மிப்படைந்து  உறைந்து நின்றனராம் ...

 

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல 10 வருடங்கள் ..

பாரதம் பக்கம் தலைவைக்கவே தைரியம் வரவில்லை ... 

 

அதன்பின் ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு போன மானத்தை திரும்பி வாங்கலாமென்று மறுபடியும்    கிட்டத்தட்ட 18 வருடம் கழித்து  மறுபடியும் ஒரு பெரிய கடற்படையை தயார்  செய்து  அனுப்பினார்  காலிபாத்

 

ராஜா  கிருஷ்ணராஜாவின்  மகனான அகுகா அரியணையில் இருந்தார். 

 

தோற்ற அரபியர்கள் மறுபடியும் வருவார்கள் என்பதை  அறிந்திருந்தார்.

கடற்கரை ஓரம் பெரும் கோட்டை ஒன்றை எழுப்பி இருந்தார்.

 

துறைமுகத்திலிருந்து பெரும் கால்வாய்கள் வெட்டப்பட்டு கப்பல்கள் எப்போது வேணுமானாலும்  உள்ளே இழுக்க வசதிகள் செய்திருந்தார். 

வணிகர்கள் மூலம் நட்பு பெற்ற கிரேக்கர்கள் மூலம் பொறிகளை பற்றி அறிந்தவர் கோட்டையில் உச்சியிலே பொறிகள் நிர்மாணித்திருந்தார் .    

 

இதற்கிடையே நகரினுள் சூரியன் சிவன் சக்தி  மூவருக்கும் பிரம்மாண்ட ஆலயம் எழுப்பி இருந்தார்.  

மீனை தன்  சின்னமாகவும் 

வாயுதேவனை காவலனாகவும் அறிவித்திருந்தார்.

 

அரேபியர்களின் கப்பல்கள் அந்த இரண்டாவது  அழிவை சந்திக்க வந்து சேர்ந்த  வருடம் 776 

 

போன முறை நடந்தவைகளை கேள்விபட்டிருந்தவர்கள் துறைமுகத்தில் நிற்கும் எந்தக் கப்பலானாலும்  உடனடியாக  கொளுத்தவேண்டுமென்று பெருவாரியான வில் வீர்களுடன் தயாராக நுழைந்தார்கள் ..

 

ஆனால் இவர்களை கண்டதும் அந்த கப்பல்கள் விரைவாக மிக விரைவாக புதிதாக  அமைக்கப்பட்டிருந்த கால்வாய்கள் வழியாக இழுத்து செல்லப்பட , கண்ணிமைக்கும் நேரத்தில் துறைமுகத்திலிருந்த கப்பல்களெல்லாம் மறைய, அரபுக்கப்பல்களை  புதிதாக எழுந்த துறைமுக கோட்டை முறைத்தது ... .. .

 

கோட்டையின் உச்சியிலிருந்து கிளம்பிய பொறி அம்புகள் கப்பல்களை தாக்ககப்பல்களிலிருந்து இறங்கிய   ஆயிரக்கணக்கான வீரர்கள் அரேபிய பட்டா கத்தியுடன்  கோட்டையை நோக்கி ஓடினர் ....

 

அவை நெருங்கும்வரை கோட்டை கதவுகள் திடீரென திறக்கப்பட ...

அகுகா தலைமையில் சைந்தவ குதிரைப்படைகள் அசுரவேகத்தில் வெளி வந்து அரேபியர்களை தாக்கியது ...

 

இதற்குள் இன்னொரு புறம் கால்வாய்கள் மூலம் வந்த சைந்தவி கப்பல்கள் அரபிய கப்பல்களை கொளுத்த, கிட்டத்தட்ட  அரேபிய படைகள் சர்வ நாசமாகின.

மிக சில கப்பல்கள் மட்டும் சொற்ப வீரர்களுடன் திரும்பியது...

 

அவற்றை பலமைல் தூரம் சைந்தவ கப்பல்கள் துரத்தி பின் ஜெயகோஷத்துடன் திரும்பின .

 

அரேபிய மத குரு  காலிபாத் இரண்டு காரியங்கள் செய்தார் :

 

1.இனி வாழ்நாள் முழுவதும் எப்போதுமே அரேபியர்கள் இந்துஸ்தானுக்குள் கப்பலில் படையெடுத்து  போகக்கூடாது என்பதை நிரந்தர  உத்தரவாக பதித்தார் 

 

2.இரண்டாவது , இந்தியாவில் துறைமுக நகரங்களில் ஒரு பயங்கர தொற்று நோய் இருக்கிறது .அதிலே அரேபிய வீர்கள் இறந்ததாக அறிவித்தார். 

 

ஆனால் குஜராத்தில் கிடைக்கும் அகுகாவின் கல்வெட்டுகளும் 

சமகால சரித்திர ஆசிரியர்களின் குறிப்புகளும், தாமிர பட்டயங்களும்  உண்மையை சொல்லுகின்றன..

எல்லாவற்றுக்கும் மேலாக அதன் பின் ஜென்மத்துக்கு  அரேபிய படைகள் கடல்வழியாக  இந்தியாவை தாக்கியதே கிடையாது .

 

சைந்தவ வீரன் அகுகா #சமுத்திராதிபதி   என்று பட்டம் பெற்று ஆவணங்களிலும் அவ்வாறே 

அழைக்கப்பட்டார். 

 

ஆதாரங்கள் 

 

1.Maritime History of India: An Overview- டர் அமித் குமார் 

2.சைலேந்திர நாத் சென்  Ancient Indian History and Civilization

3.சைந்தவ குஜராத் கல்வெட்டுகள்

4.இந்த இரண்டு போர்களையும் அகுகாவின் வெற்றியையும் அந்த இனத்தின் தலைமுறை விபரங்களையும் பற்றி தேவைக்கு அதிகமாகவே ஆதாரங்கள் உண்டு. தாமிர பட்டயங்களின் சின்ன பகுதி உங்கள் பார்வைக்கு......

~நன்றி:

திரு.பழனிகுமார்..

ப்யாரீப்ரியன்...

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு