பணியாரம்


 

பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டு ஒன்று, பணியாரம் செய்ய தேவையான பொருட்களை பற்றி கூறுகிறது.

"பணியாரம் செய்ய தேங்காய் கதலிப்பழம்,சீரகம்,மிளகு, சுக்கு, சர்க்கரை, ஆரஞ்சுப்பழம், கரும்பு என பழங்கள் வைத்து பணியாரம் செய்ததை கூறுகிறது.

அதற்குமுன் மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு, பணியாரம் செய்ய தேங்காயும், கருப்பட்டியையும் பயன்படுத்தியதை கூறுகிறது!

 

இன்று நாம் செய்யும் பணியாரம் இவ்வளவு ருசியாய் செய்வார்களா என்பது சந்தேகமே.

 

அதிரசம்:

இன்றும் நம் வீடுகளில் நொறுக்குதீனிகளில் முக்கிய இடம்பிடிப்பது, அதிரசமே!  சில கோவில்களில் இறைவனுக்கு முக்கிய நிவந்தமாய் படைக்கப்படுகிறது! கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு அதிரசம் செய்ய தேவையான பொருட்களை பட்டியலிடுகிறது!  அதிரசம் செய்ய உபயோகப்படுத்திய அரிசிக்கு 'அதிரசப்படி' என பெயர். இதற்கென தனிவகை அரிசியை பயன்படுத்தியுள்ளனர்.

அதிரசம் செய்ய பயன்படும் பொருள்:

1.அதிரசப்படி-1 மரக்கால்

2.வெண்ணெய்-2நாழி

3.சர்க்கரை-100 பலம்

4.மிளகு-1 ஆழாக்கு

(இந்த அளவீடுகளை கூகுள் செய்து தெரிந்து கொள்க)

 

கும்மாயம்

 

கும்மாயம் அல்லது பயிற்றுப்பொங்கல் குறித்து 10 ம் நூற்றாண்டு வரகுணபாண்டியன் காலத்து அம்பாசமுத்திரம் கல்வெட்டுகளில் பயின்று வருகிறது. இவ்வுணவை இன்றைய திருவையாறு புகழ் "அசோகா அல்வா"வுடன் ஒப்பிடலாம்.

கல்வெட்டில் இவ்வுணவு "கும்மாய பயிற்றுப் போகனம்" என அழைக்கப்பட்டுள்ளது.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு