Posts

Showing posts from September, 2022

கன்ஹேரி குகை

Image
  மும்பை கன்ஹேரி குகைகளில் அவலோகிதேஸ்வரரும் ஜப்பானிய கல்வெட்டுகளும் புத்தரின் மரணத்திற்குப் பிறகு, ஏராளமான ஆன்மீக மனிதர்கள் மற்றும் தெய்வங்கள் பௌத்த தேவாலயத்தில் பல நூற்றாண்டுகளாக, இணைக்கப்பட்டன. அவர்களில் அவலோகிதேஸ்வரர், இரக்கமுள்ள ஒரு போதிசத்துவர். அவர் துன்பப்படுபவர்களுக்கு உதவ அயராது உழைப்பதாகக் கூறப்படுகிறது. போதிசத்துவர்கள் கடவுள்கள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாலும், அவர்கள் மிகவும் பிரபலமானவர்கள். விடுதலைக்கான பாதையில் மனிதர்களுக்கு உதவும் இரக்கமுள்ள மனிதர்கள் என்று வர்ணிக்கப்படும் பௌத்த பாமர மக்கள் போதி சத்துவர்களிடம் வரங்கள் மற்றும் உதவிகளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் மையத்தில் கன்ஹேரி குகைகள் என்று அழைக்கப்படும் 100க்கும் மேற்பட்ட பண்டைய புத்த குகைகள் உள்ளன. இவற்றில் பழமையானது, கிமு 3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்த, குகை எண். 41.  இந்த குகையின் நுழைவாயிலில் பதினொரு தலைகள் கொண்ட அவலோகிதேஸ்வரரின் 4 அடிக்கு மேல் சிற்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே அறியப்பட்ட பழமையான ஒன்று என்பதால், கன்ஹேரியில் ...

Sumerian standing female worshiper 2600–2500 B.C.E.

Image
  Sumerian standing female worshiper 2600–2500 B.C.E. ''This statue of a standing woman with her hands clasped in front of her chest was found in the plasterings of a mud-brick bench located in one of the cellas of the Nippur temple of Inanna (Level VIIB), the Sumerian goddess of abundance. Her garment is draped over her left shoulder and falls in folds indicated by two incised lines along the border of the otherwise smooth fabric. The feet are carved in high relief against the back support and the toes and ankles are clearly indicated. The wavy hair is held in place by two plain bands, and curly locks hang down on either side of the face. Inlay of shell and lapis lazuli survives in her left eye. The best-preserved statues at Nippur are those that were buried within the temple furniture, like this example. Such deliberate burials suggest that temple offerings and equipment remained sacred even when no longer in use.''

Dr.J.R.SIVARAMAKRISHNAN

Image
 

Dr.J.R.SIVARAMAKRISHNAN

Image
 

உடையார்குடிக் கல்வெட்டு

Image
உடையார்குடிக் கல்வெட்டு ஆதித்த கரிகாலன் கொலைபற்றிக் குறிப்பிடும் வரலாற்றுச் சாசனமான உடையார்குடி கல்வெட்டின் வாசகத்தினை இனி காண்போம். "ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........................ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம். தாங்களும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவ...

4,200-year-old hazelnuts

Image
  4,200-year-old hazelnuts, marble idols found in Türkiye's Kütahya The remains of 4,200-year-old hazelnuts found in Tavşanlı Mound, Kütahya, central Türkiye, Aug. 23, 2022. (AA) BY ANADOLU AGENCYAUG 24, 2022 2:50 PM During the excavations in Tavşanlı Mound, located in the central Turkish province of Kütahya, the remains of 4,200-year-old hazelnuts and marble idols were unearthed. Dubbed the "Heart of Kütahya” over its shape detected through aerial footage, the Tavşanlı Mound, located in the namesake district, is being unearthed through the cooperation of the Ministry of Culture and Tourism and Bilecik Şeyh Edebali University (BŞEU), in the status of "President Decisive Excavation." In the new period, excavations in the mound, which started two months ago under the direction of Erkan Fidan of the BŞEU Archeology Department, the remains of hazelnuts and marble idols became the latest findings unearthed at the layer dating back to 4,200 years ago. Archaeologists evalua...

பரமேஸ்வரமங்கலம்

Image
  கைலாசநாதர் ஆலய கணபதி,(பொ.ஆ.பி 874) பரமேஸ்வரமங்கலம் செய்யூர் வட்டத்தில் பரமேஸ்வரமங்கலம் என்ற பழமையான ஊர் அமைந்துள்ளது. இங்கே பாலாற்றின் கரையோரம் தீவு போன்ற பெரிய பாறையின் மீது உள்ளது கைலாசநாதர் ஆலயம். மழைக்காலங்களில் ஆலயத்தை தரிசிக்க பாலம் மீது தான் பயணிக்க வேண்டும். இந்த கைலாசநாதர் கோயில் பல்லவர் காலத்தில் "சைலேஸ்வரம் கோயில்" என்று அழைக்கப்பட்டுள்ளது. நிகரிவி சோழ சதுர்வேதி மங்கலம் என்ற இந்த ஊர் பெயர் இப்போது பரமேஸ்வரமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.  நிருபதுங்க வர்மன் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் பல்வேறு காலங்களில் திருப்பணிகள் நடைபெற்று பெரிய மாற்றங்களுக்கு உள்ளாயிற்று. தற்போது அதிஷ்டானம் கற்களாலும் மேல்பகுதி விமானம் செங்கற்களாலும் அமைந்துள்ளது.  சிவனுக்கு எடுப்பிக்கப்பட்ட இக்கோயிலில் நிருபதுங்க வர்மனுடைய 15வது ஆட்சி காலத்தில் (பொ.ஆ.பி.874) பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று ஆலய நுழைவு வாயிலின் வலது புறம் உள்ளது.அதில் இங்குள்ள கணபதி சிலையும் அவருக்கு ஒரு சிறிய கோயிலையும் "தண்டியக் கிழார் பாண்டிய கிராம வித்தர் மனைவி தேவச்சாணி" என்பவள் எடுப்பித்தாள் என குறிப்பிடுக...

விஜயாவும் தண்டியும்

Image
  விஜயாவும் தண்டியும் மேலைச் சாளுக்ய பேரரசன் இரண்டாம் புலகேசி வீழ்ந்ததன் பிறகு நிலைகுலைந்த வாதாபியில் சந்த்ராதித்யனுக்குப் பிறகு அவனுடைய குழந்தையின் சார்பில் ஆட்சி செய்தவள் விஜயா பட்டாரிகா. இவளுடைய ஆட்சிக் காலத்திற்குப் பிறகும் முதலாம் விக்ரமாதித்யனால் தன் அண்ணனின் ப்ரிய மஹிஷி என்று குறிப்பிடப்பெற்றவள். அவன் குறிப்பிடும் விதத்தை வைத்து இவள் பேரழகியாக இருந்திருக்கலாமென்று தெரிகிறது. விஜ்ஜிகா  என்று கன்னடத்திலும் விஜயாங்கா என்று வடமொழியிலும் வழங்கப்பெற்ற இவள் மிகச் சிறந்த கவிதாயினி. காளிதாஸனுக்குப் பிறகு வைதர்பீ ரீதியில் எழிலுற யாக்கும் திறன் கைவரப்பெற்ற ஒரே கவிஞர் என்று ராஜசேகரரால் கொண்டாடப்பெற்றவள். அவள் தண்டியைப் பற்றி கூறியதாக ஒரு கவிதை உண்டு. नीलोत्पलदलश्यामां विज्जिकां मामजानता ।  वृथैव दण्डिना प्रोक्तं सर्वशुक्ला सरस्वती ॥  நீலோத்பலதலஶ்யாமாம்  விஜ்ஜிகாம் மாமஜானதா |   வ்ருதைவ தண்டினா ப்ரோக்தம்  ஸர்வஶுக்லா ஸரஸ்வதீ || தண்டி தன்னுடைய காப்புச் செய்யுளில் எல்லா வகையிலும் வெண்மையான கலைமகளை வணங்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதைக் குறிப்பால் தி...

உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் கல்வெட்டுகள்

Image
  உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் கல்வெட்டுகள் காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூரில், உத்திரமேரூர் கீழ் ரோட்டில் செய்யாற்றின் கிழக்கு பக்கத்தில் சின்ன நாராசம் பேட்டை தெருவில்ஈசான்ய மூலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷி அம்பிகா ஸமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்  கட்டப்பட்ட  பழமையான கோவில். இக்கோவில் எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர் தண்டிவர்மனால் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பின் கட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது. "ஈசான்யாம் லிங்கேஷு சிரேஷ்டம்' என்னும் வாக்கியம், இங்குள்ள கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. ஏகம்பரநாதர் கோவிலில் கடன் வாங்கி, கோவில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்த தகவல், இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ராஜராஜனின் கல்வெட்டு இக்கோயிலை  "எம்மூர் ஸ்ரீ கைலாயமுடைய மஹாதேவர் கோயில்"  என்று அழைக்கிறது. இக்கோயிலில் மூன்று சந்திகளிலும் வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டு காகவும் திருவமுது காகவ...