முதலாம் இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்களின் தடங்காணூம் பயணம்..... கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் சார்பில் முதலாம் இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்களின் தடங்காணும் பயணத்தை கடந்த 14 . 10 . 2015 அன்று முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கங்கபாடி , நுளம்பப் படி , தடிகை பாடி போன்ற இடங்களில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது....ஆய்வுக் குழுவில் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் திரு கோமகன், இந்திய தொல்லியல் துறை கல்வெட்டியல் துறை மேனாள் இயக்குநர் திரு . வெங்கடேசன் , சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன் & பேராசிரியர் முனைவர் . எஸ் . கண்ணன் , திரு .சசி, தி இந்து தமிழ் உதவி ஆசிரியர். திரு குள.சண்முக சுந்தரம். ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்....