பெண்மை போற்றும் உருப்பிடி அம்மன்

பெண்மை போற்றும் உருப்பிடி அம்மன்





முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் , உதவிப் பேராசிரியர் , வரலாற்றுத்துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

    
        கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் இருந்து  வடக்கே 6 கி.மீ. தூரத்தில் சந்தவெளிப்பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தின் தெற்குப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகள் பழைமையான உருப்பிடி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

உருப்பிடியம்மன் வரலாறு

      இயற்கையான புதர்கள், வயல்களால் சூழப்பட்ட பகுதியில் வடக்கு நோக்கி வாறு உருப்பிடியம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை வெற்றிக்களிந்த வீரமுண்டனார் பரம்பரையை சார்ந்தவர்கள் இப் பகுதியின் பரம்பரையாக வருவாய் மண்டலத் தலைவர்களாக இருந்து வந்தனர். இவர்கள் சோழப் பேரரசின் கீழ் செயல்பட்டவர்கள்.
   இவர்கள் சந்தவெளிப்பேட்டையின் வடக்குப்பகுதியில் கோட்டை மற்றும் அரண்மனையும் அமைத்து  வாழ்ந்து வந்தனார் மேலும் அரண்மனையை சுற்றி கோட்டை சுவரும் அதை சுற்றி அகழியும் அமைத்து இருந்தனர். இவர்களின் கோட்டை பகுதியானது  சுமார் 50 ஏக்கர் பகுதியில் இருந்ததை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கி.பி. 10 – 13 ஆம் நூற்றாண்டை சார்ந்த கட்டடப்பகுதி , மட்கல ஓடுகள், ‘’ ட ‘’வடிவிலான கூறை ஓடுகளின் பாகங்கள், வண்ணக் கல்மணிகள் போன்றவை கோட்டை மேட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
      
          இந்த கோட்டைப் பகுதியின் மேற்குப் பகுதி வழியாக இராஜராஜன் பெருவழி சோழர்கள் காலத்தில் அமைக்கப்படிருந்தது. இது தற்போது சென்னை – கும்பகோணம் சாலையாகும். இந்த பெருவழியின் குறுக்கே கன்னியாக்கோயில் ஓடை செல்கிறது. இதில் வருடம் முழுவதும் தண்ணீர் செல்லும். இந்த ஓடையில் மழைக்காலங்களில் வரும் அதிகப் படியான வெள்ள நீரினால் பெருவழி பாதையானது வெள்ளத்தால் அடிக்கடி அழிக்கப்படும். இதனை பராமரிக்கும் பாணியை சோழ மன்னர்கள் வெற்றிகளித்த வீரமுண்டனாரிடம் ஒப்படைத்து இருந்தனர். ஒருக்கட்டதில் சோழ மன்னர்கள் இதன் குறுக்கே பாலம் ஒன்றை கட்ட சந்தவெளிப்பேட்டை தலைவனுக்கு உத்தரவு பிரப்பித்தனர். உடனே பாலம் கட்டடி முடிக்கப்பட்டது. ஆனால் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் உடைந்து. பாதை தடைபட்டது. மேலும் வழிப்போக்கர்கள் பலர் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இறந்து விடுவர். இவ்வாறு அடிக்கடி பாலம் கட்டப்படவும் உடனே மழை வெள்ளத்தால் உடையவுமாக உயிர் இழப்பை தவிற்க முடியாததாகவும் இருந்தது. பாலம் திரத் தன்மையோடு கட்டப்படாததால் தான் உயிர் இழப்புக்கள் ஏற்படுவதாக உணர்ந்தான்.
      
         ஒரு நாள் சோழ மன்னனிடம் இருந்து கடிதம் ஒன்று வீரமுண்டனாருக்கு வந்தது. அதில் தாங்கள் இந்த பாலத்தை வலிமையாக கட்டவேண்டும். அப்படி கட்டவில்லை யானால் உந்து வருவாய் தலைவர் உரிமை பறிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர். கடிதத்தை படித்த வீரமுண்டனார் செய்வது அறியாது இருந்தார். அப்போது தமது குலதெய்வத்திடம் முறையிட்டார் அன்று இரவு கனவில் தோன்றிய அவரது குலதேவமானது தலைச்சன் பெண் , நிறைமாதகர்ப்பிணியை பலிகொடுத்து விட்டு பாலம் கட்டப்பட்டால் அது உடையாமல் இருக்கும் என்று கூறி மறைந்தது.
    
      அப்பொழுது தமது ஒரே மகள்  தல பிரசவத்திற்காக வீரமுண்டனாரின் அரண்மனைக்கு வந்திருந்தார். தமது தந்தையார் ஏதோ பறிகொடுத்தவரைப் போன்று உள்ளாரே என்று கருதி சோகத்திற்கான காரணம் கேட்டாள். மன்னன் அனுப்பிய கடிதம் பற்றியும் தமது கணவில் குலதெய்வம் கேட்ட பலியையும் பற்றி தமது மகளிடம் கூறினார். உடனே அவள் இதற்கு ஏன் கவலை படவேண்டும் என்று கூறி பூஜைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னாள். நமது ஆட்சிக்கு உட்பட்ட மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும், வெள்ளத்தால் ஏற்படும் உயிர் சேதத்தை தடுக்க வேண்டும் என்பதை கருதிய வீரமுண்டனாரின் மகள் தன்னை  பலிகொடுத்து கொள்ளவும் என்று கூரினாள்.
       
      இதைகேட்டு தந்தையானவர் அதிர்ச்சியில் உறைந்தே போனார். இருப்பினும் பூஜையை தாமே மேற்கொள்ள முயன்றாள். அம்மாவசை இரவில் வீரமுண்டனாரின் நிறைமாத கர்ப்பிணியான பாசமகள் மேலும் ஒரே  மகள் பலிகொடுக்கப்பட்டால். அன்று இரவே பாலம் கட்டுவதற்கான முயற்சி தொடங்கியது .பாலம் கட்டப்பட்டது அது வலிமைத் தன்மையோடு நிலைபெற்று இருந்தது.
    
       தமது அரச பதவி, மக்கள் நலன் இவைகளுக்காக தன்னையே பலிகொடுத்துக் கொண்ட மகளை வீரமுண்டனாரின் வாரிசுகள் தமது குலதெய்வமாக இன்றளவும் வணங்கி வருகின்றனர் உருப்பிடி அம்மன் என்ற பெயரில்.
     
         மேலும் உருப்பிடியம்மன் பலிகொடுக்கும் போது  இரத்தம் சிந்திய இடம் இன்று வரை கரம்பாகவே காட்சியளிக்கிறது. வீரமுண்டனார் கட்டிய பாலம் இருந்த இடத்தில் தான் பிறகு  வந்த ஆங்கிலேயர்கள் கான்கிரிட் பாலத்தை கட்டியுள்ளனர். ஒரு பெண் பலிகொடுக்கப்பட்ட இடத்தில்  தற்போது உள்ள பாலம் கட்டப்பட்டதால் என்பதலோ  தெரியவில்லை  இன்றுவரை பாலம் உடையாவும் அரசு கட்டவுமாகவே உள்ளது.   
        

          


  

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு