Posts

Showing posts from November, 2015

கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்

Image
கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்  மேற்கொண்டு வரும் முதலாம் இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்களின்  தடங்காணும் பயணம்.....இரண்டாம் பாகம்  தமிழ் இந்து நாளிதழில்...

திருத்தினைநகர்

Image
  திருப்பம் தரும் திருத்தினைநகர்              முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன்                 உலக மக்கள் வேற்றுமையின்றி பரந்த மனப்பான்மையோடு  வாழ வேண்டுமே ஆனால் அது ஆன்மிகத்தால் மட்டுமே முடியும் என்பதை  உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். குறிப்பாக தமிழகத்தில் தோன்றிய  சமய பெரியோர்கள் அனைவருமே மக்களுக்கு செய்யும் தொண்டை மகேசனுக்கு செய்யும் தொண்டாகும் என்று கூறி மக்களை நல்வழிபடுத்தி வந்தனர். மேலும் மனித உள்ளத்தில் இருக்கும்  தான் என்ற அகங்காரத்தை  நீக்கி அன்பியல் உணர்வு வளர்க்கப்பட்டால்  தான் உலக மக்கள் அமைதியை பெறமுடியும். இதை போதிக்கும் இடம் கோயிலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்  உருவாக்கப் பட்டவைகள் தான்  கோயில்களாகும். திருத்தினைநகர் அமைவிடம்      இவ்வூர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் கடலூர்  to சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்...

பெண்மை போற்றும் உருப்பிடி அம்மன்

Image
பெண்மை போற்றும் உருப்பிடி அம்மன் முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் , உதவிப் பேராசிரியர் , வரலாற்றுத்துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.              கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் இருந்து  வடக்கே 6 கி.மீ. தூரத்தில் சந்தவெளிப்பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தின் தெற்குப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகள் பழைமையான உருப்பிடி அம்மன் கோயில் அமைந்துள்ளது. உருப்பிடியம்மன் வரலாறு       இயற்கையான புதர்கள், வயல்களால் சூழப்பட்ட பகுதியில் வடக்கு நோக்கி வாறு உருப்பிடியம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை வெற்றிக்களிந்த வீரமுண்டனார் பரம்பரையை சார்ந்தவர்கள் இப் பகுதியின் பரம்பரையாக வருவாய் மண்டலத் தலைவர்களாக இருந்து வந்தனர். இவர்கள் சோழப் பேரரசின் கீழ் செயல்பட்டவர்கள்.    இவர்கள் சந்தவெளிப்பேட்டையின் வடக்குப்பகுதியில் கோட்டை மற்றும் அரண்மனையும் அமைத்து  வாழ்ந்து வந்தனார் மேலும் அரண்மனையை சுற்றி கோட்டை சுவரும் அதை சுற்றி அகழியும்...

முதலாம் இராஜராஜனின் கலியூர் கன்னடக் கல்வெட்டு

Image
                            முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன்          முதலாம் இராஜராஜனின் கலியூர் கன்னடக் கல்வெட்டு                  நேற்று தமிழ் ஆர்ட்ஸ் அகாடெமி சார்பில் முனைவர் நாகசாமியின் அடுக்ககத்தின் வண்டிகள் நிறுத்திமிடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தியத் தொல்லியல் நிறுவனத்திலிருந்து இரு நாள்களுக்கு முன் ஓய்வுபெற்றிருந்த முனைவர் வெங்கடேசன் , கர்நாடகப் பகுதியில் தான் கண்டுபிடித்த சோழக் கல்வெட்டு ஒன்றைக் குறித்துப் பேசினார். இந்தியத் தொல்லியல் துறையின் முனைவர் வெங்கடேசன் கர்நாடகப் பகுதியின் வரலாற்றைக் குறிப்பிட்டு , அங்கு ஆட்சி செய்த வெவ்வேறு அரச வம்சங்களையும் அவர்களது கோயில் கட்டுமானங்களையும் படங்களாக வேகமாக காட்டிச் சென்றார். பிறகு முக்கியமான பகுதிக்கு வந்தார். ராஜராஜனது மெய்க்கீர்த்தியில் இவ்வாறு வரும்: ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்க...

முதலாம் இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்களின் தடங்காணூம் பயணம்

Image
முதலாம்  இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்களின்  தடங்காணூம் பயணம்.....                        கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் சார்பில்  முதலாம் இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்களின் தடங்காணும்  பயணத்தை  கடந்த 14 . 10 . 2015 அன்று முதல்  கர்நாடக மாநிலத்தில் உள்ள  கங்கபாடி , நுளம்பப் படி , தடிகை பாடி  போன்ற இடங்களில்  ஆய்வை  மேற்கொண்டு  வருகிறது....ஆய்வுக் குழுவில்  கங்கை கொண்ட சோழபுரம்  மேம்பாட்டுக் குழுமத் தலைவர் திரு கோமகன், இந்திய தொல்லியல் துறை  கல்வெட்டியல் துறை மேனாள் இயக்குநர் திரு . வெங்கடேசன் , சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள்  முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன் & பேராசிரியர்  முனைவர் . எஸ் . கண்ணன் , திரு .சசி, தி இந்து  தமிழ் உதவி ஆசிரியர். திரு குள.சண்முக சுந்தரம். ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்....  

உருப்படி அம்மன் வரலாறு....

Image
                  உருப்படி அம்மன் வரலாறு....                    கடலூர் மாவட்டம்,  குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூரில் இருந்து  6 கி.மீ. தூரத்தில் உள்ள சந்தவேளிப்பேட்டை  கிராமத்தின்  தெற்குப் பகுதியில்  உள்ள  கன்னியாக்கோயில் ஓடையின்  வடகரையில்    உருப்படி அம்மன்  கோயில்  அமைந்துள்ளது. இக் கோயில்  சுமார் 350 ஆண்டுகள்  பழமையானது.....அதன்  வரலாறு..