Posts
Showing posts from 2021
உலகப் பாரம்பரியச் சிற்பங்கள் - பாதுகாப்பும் ஆய்வும்
- Get link
- X
- Other Apps
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் உலக மரபு வார விழா சிறப்பு ஆய்வுரைகள் (நவம்பர் 19- 25, 2021) ----------------------**--------------------- திசைக் கூடல் - இணையவழி நிகழ்ச்சி 7 நாள் - 7 ஆய்வாளர்கள் - 7 சிறப்பு ஆய்வுரைகள் ----------------------**--------------------- 19-11-2021: பேரா. முனைவர். வீ.செல்வக்குமார் - இந்தியப் பெருங்கடற் பகுதியில் மரபுச் சின்னங்கள் யூடியூப் காணொளியாக : https://youtu.be/I_iKcwwr3h0 20-11-2021: பேரா. ரமேஷ் - பல்லவர் கால கட்டிடக் கலை யூடியூப் காணொளியாக : https://youtu.be/A1fMnq-8CjA 21-11-2021: பேரா. முனைவர். இரவி - பழந்தமிழ்க் கல்வெட்டுக்கள் - பாதுகாப்பும் விழிப்புணர்வும் யூடியூப் காணொளியாக : https://youtu.be/wJJ_Bx2ZsyU 22-11-2021: பேரா. முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் - உலகப் பாரம்பரியச் சிற்பங்கள் - பாதுகாப்பும் ஆய்வும் யூடியூப் காணொளியாக : https://youtu.be/AWEk2uuM9-8 23-11-2021: பேரா. முனைவர் கனக. அஜிததாஸ் - தமிழக சமணப் பண்பாட்டு எச்சங்கள் யூடியூப் காணொளியாக : https://youtu.b...
Roman Wooden bridge
- Get link
- X
- Other Apps
The picture shows what the wooden bridge that the Roman legionaries built to cross the Rhine River must have looked like. Caesar provides a detailed description of the technique used to make it in his De Bello Gallico. The first was built in 55 BC, and according to archaeological finds, in a place to be identified with Neuwied, 15 km downstream of Koblenz and south of Bonn. The second one was built two years later in 53 BC, a little further upstream (about 2 km), in a locality between Urmitz and Weissenturm. Both bridges were built during the two campaigns conducted by Caesar against the Germans, as part of the conquest of Gaul. It was an example of high military engineering in which the Romans were unsurpassed masters. What is amazing even for modern engineers is that the legionaries took only 10 days to build the bridge. Thank you. Roman History
சல்லேகன்
- Get link
- X
- Other Apps
சல்லேகன் விரதமிருந்து உயிர் விடப் படுக்கையில் படுத்திருக்கிறான் கங்க அரசன் நீதிமார்கன். இந்த நிசிதிகை நினைவுக்கல்லை தன்தந்தைக்காக எடுப்பித்தவன் சத்யவாக்கியன். தந்தையினருகில் நின்று கொண்டிருக்கிறான். தந்தை ஏரயங்க நீதிமார்கன் படுக்கையின் கீழே" அர்கத் பட்டாரகரன் தாமரைத் திருவடிகளின் கீழே" என்று கன்னடத்தில் பொறித்திருக்கிறான். இந்த அரகத் பட்டாரகர்தான் அரசனின் குருவான ஜீனசேனன். இவரே சமணப் பனுவலான ஆதிபுராணத்தை யாத்தவர். இந்நிசிதிகைக்கல் மைசூர் மாவட்டத்தில் தொட்டவுண்டி கிராமத்திலிருந்து எடுத்து வரப்பட்டு பெங்களூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. காலம் பொ.ஆ.869.
கலியூர்
- Get link
- X
- Other Apps
கலியூர் விக்கிரம சோழன் உலாவில் , இராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு போர்பற்றிய இருவரிகள்.. ! “ தூதர் காப்புண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும் கொண்டு , மலைநாடு கொண்டோனும்.. “ காவிரியின் வலக்கரையான கலியூர் என்னுமிடத்தில் , கங்கர் படைக்கும் , சோழர் படைகளுக்கும் இடையேயான போர். தமது தலைநகரான தலைக்காடு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த கங்கர்படை , சிறைபிடிக்கப் பட்டிருந்த தமது தூதன் ஒருவனை காக்க குடமலைநாடு நோக்கிப் பயணித்த சோழர் படையினை , இடையே தடுத்தி நிறுத்திய போர். சோழர் படையின் தளபதியாக அப்ரமேயன் , இப்போரில் தான் கொன்றதாகக் கூறும் பதினெட்டு தளபதிகளின் பேரையும் , பட்டியலிட்டு வைத்துப் போயிருக்கிறான் தமது கல்வெட்டில். ( படம் கீழே ) மேற்கூறிய விக்கிரம சோழனுலாவில் காணப்படும் வரிகளில் உள்ள சுரம் என்னும் வார்த்தை ‘ காடு ’ என்ற பொருள்கொள்ளப்பட்டு , ஈரொன்பது , அதாவது பதினெட்டு காடுகளை ஒரே பகலில் கடந்தது சோழர் படை என்று பொருள்கொள்ளப் பட்டிருந்தது முன்பு. இக்கல்வெட்டு கிடைத்தபின் , சுரம் என்ற வார்த்தை , காட்டினை மட்டுமல்ல.. சிரமாகிய தலையினையும் குறிக்கும் என்பது தெளிவாக விளங...
கலியூர் கல்வெட்டு
- Get link
- X
- Other Apps
கலியூர் கல்வெட்டு இந்தியத் தொல்லியல் நிறுவனத்திலிருந்து இரு நாள்களுக்கு முன் ஓய்வுபெற்றிருந்த முனைவர் வெங்கடேசன் , கர்நாடகப் பகுதியில் தான் கண்டுபிடித்த சோழக் கல்வெட்டு ஒன்றைக் குறித்துப் பேசினார். கர்நாடகப் பகுதியின் வரலாற்றைக் குறிப்பிட்டு , அங்கு ஆட்சி செய்த வெவ்வேறு அரச வம்சங்களையும் அவர்களது கோயில் கட்டுமானங்களையும் படங்களாக வேகமாக காட்டிச் சென்றார். பிறகு முக்கியமான பகுதிக்கு வந்தார். ராஜராஜனது மெய்க்கீர்த்தியில் இவ்வாறு வரும்: ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்... இவையெல்லாம் ராஜராஜன் வெற்றிகொண்ட நாடுகள். இவற்றில் கங்கபாடி , நுளம்பபாடி , தடிகைபாடி , குடமலை நாடு ஆகியவை இன்றைய கர்நாடக மாநிலத்தையும் ஒருபகுதி தமிழக மாநிலத்தையும் சேர்ந்தவை. ...
சைந்தவர்கள்
- Get link
- X
- Other Apps
தென்கிழக்கு பகுதியான குஜராத்தை ஆண்டவர்கள் சைந்தவர்கள். சிந்துநதிபுரத்திலிருந்து வந்ததால் சைந்தவர்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள் மகாபாரத்தில் அபிமன்யு சாவுக்கு காரணமான ஜெயத்ரதனின் அதே சைந்தவன் குலம்தான் இவர்களை ஜயத்ரதர்கள் என்றும் அழைப்பதுண்டு .. பொது யுகம் 735 லிருந்து 920 வரை 12 சைந்தவ அரசர்களின் விபரங்கள் ஆவணமாக கிடைக்கிறது. இப்போது கௌமிலி என்றழைப்பப்படும் பௌதாம்பிகா இவர்களது தலைநகரம் . அந்த காலத்திலே கடல் வாணிபம் செய்து வந்தார்கள். செழிப்பான இந்த பிரதேசத்தில் நுழையவேண்டுமானால் சிந்துநதி மன்னர்களை வீழ்த்தி வரவேண்டுமாதலால் சுலபமாக கடல் வழியாக சென்று குஜராத்தை பிடித்துவிடலாமென்று எண்ணமிட்டார்கள் அரேபியர்கள். அலி மஹித்தி என்ற காலிபாத்தின் கட்டளை ஏற்று சிந்து கவர்னரான ஹாசன் தனது தளபதி அமரூபன் ஜலால் தலைமையில் ஒரு பெரும் கடற்படையை அனுப்பினார் .. சைந்தவ தேசத்தை கடல்வழியாக தாக்கி பிடிக்க.. போரை எதிர்பாராத ...