தலைவனுக்காக தன்னுயிர் மாய்த்தல்

 


முதலாம் குலோத்துங்க சோழனின் பதினொன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு

 

சிவகங்கையிலிருந்து இளையான்குடி செல்லும் வழியில் அமைந்துள்ள மல்லல் என்னும் ஊரில் உள்ள கல்வெட்டு. இது முதலாம் குலோத் துங்கச் சோழனின் பதினொன்றாம் ஆட்சி யாண்டு, அதாவது பொது யுகம் 1081ஐ சேர்ந்தது. இவ்வூர்ப் பகுதியில் இருந்த வீரன் உதாரன் ஆன குலோத்துங்கச் சோழ மூவரையன் நோய்வாய்ப்பட்டு அவதியுற் றான். தனது தலைவனுக்கு வந்த அந்நோய் நீங்கவேண்டும் என்று அப்படைத்தலைவனின் சேவகன் அம்பலக் கூத்தன் தூங்குதலை கொடுப்பதாக வேண்டிக்கொண்டு காலப்போக்கில் வந்த நோய் நீங்கி யது. இதனால் வேண்டியபடியே அம்பலக்கூத்தன் தன் தலையை அரிந்து படைத்தான் என்றும், தன் மீது அன்புகாட்டி உயிர்நீத்த தனது சேவகனின் வழியினர்க்குக் குலோத்துங்க சோழ மூவரையதேவன் நிலத்தை தானமாக  அளித்தான் என்றும் இங்கிருக்க கல்வெட்டு குறிப் பிடுகிறது.  

 

கல்வெட்டு: 

 

ஸ்வஸ்தி ஶ்ரீ கொ

 

ங்க சோழ தேவர்க்கு யா

 

ண்டு 11 ஆவது (விமா)

 

(ட) தாரனான கொலோத்

 

துங்க சோழ மூவரைய

 

னுக்கு வியாதி தொற்ற

 

தூங்கு தலை நொந்த

 

தூங்கு தலை குடுத்

 

அம்பலக் கூத்த..

 

சாத்தி குடுத்தந 

 

து குழிச்செய்யு

 

பாதி கல்வெட்டு சிதிலமடைந்துள்ளது. 


நன்றி.....ப.அ.சரவண மணியன் மற்றும் ஜெமினி ரமேஷ் அண்ணா.

 

நவகண்டம் பற்றிய கல்வெட்டு | முதலாம் குலோத்துங்க சோழன் காலம் | பதினொன்றாம் நூற்றாண்டு | மல்லல் | சிவகங்கை மாவட்டம் | தமிழ்நாடு

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு