வேம்பத்தூர் பேராயம் செய்தவர்
நீர்நிலையும் வரலாறும்
மதுரையில் நம் முன்னோர்களின் நீர்
மேலாண்மையைக் குறிக்கும் கல்வெட்டுக்கள், தொல்லியல் சான்றுகள் வைகை நதிப்
பகுதியில் நிறைய கிடைத்துள்ளன.
மதுரை விக்கிரமங்கலம் நடுமுதலைக்குளம்
அருகே உள்ள உண்டாங்கல் மலையில் காணப்படும் தமிழிக் கல்வெட்டில் “வேம்பத்தூர்
பேராயம் செய்தவர்’ என்ற வரி காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
நீர்நிலைகளை வெட்டுவித்ததை குறித்த முக்கியமான கல்வெட்டு.
குருவித்துறை அருகே புதிதாக வயல்
வாங்கியவர் மடை நீரை தனக்கு முதலில் பாய்ச்சச்சொல்ல ‘கால் மேல்
கால்கல்லலாகாது’ என பாண்டியன் வழங்கிய ஆணை குறித்த கல்வெட்டு ஒன்றுள்ளது.
அதேபோல வைகை குருவிக்காரன்சாலை
பாலமருகில் கிடைத்த கல்வெட்டில் பாண்டியன் அரிகேசரி காலத்தில் வைகை நீரை கொந்தகை, திருப்புவனம்
வழியாக நரிக்குடி வரை கொண்டு சென்றதைக் குறித்த கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.
வைகை தேனூர் ஆற்றுப்பகுதியில்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துப் பொறித்த தங்கக்கட்டிகள்
கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வைகை நதி கடலில் கலக்கும் அழகன்குளம் அருகே அகழாய்வு
நடந்துள்ளது. அழகன்குளம் அகழாய்வில் தமிழர்களின் கடல் வாணிபத்திற்குச் சான்றாகப்
பல பொருட்களும் ஒரு பானை ஓட்டில் கப்பல் ஓவியமும் கிட்டியுள்ளது.
"நீரின்றி அமையாது உலகு, உணவெனப்படுவது நிலத்தொடு நீரே, நீர் அறம் நன்று; நிழல் நன்று"
என வாழ்ந்த முன்னோர்களின் பெருமையை நாம் எந்தளவு காக்கிறோம்?
Comments
Post a Comment