Posts

Showing posts from May, 2022

கரிகாலனின் வழிவந்தவர்கள்

Image
  ஆறாம் நூற்றாண்டிலிருந்து கர்னூலை ஒட்டியப் பகுதியில் தெலுகு சோழர்கள் ஆண்டுவந்தனர். இவர்கள் கரிகாலனின் வழிவந்ததாகக் கூறிக் கொள்கின்றனர். சீன யாத்ரிகனான யுவான் ஸாங் இவர்களைத்தான் சுளியா என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களில் குறிப்பிடத்தக்க வேந்தர்களில் ஒருவன் புண்யகுமாரன். இவன் எட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவன். இவன் வெளியிட்ட தொம்மர நந்த்யால செப்பேட்டின் காப்புச் செய்யுள் லகுலீசரைத் தொழுகிறது. जयति धृतचन्द्ररेखं विपुलामततारकाशुभं लोके। गगनमिव सुप्रसन्नं वपुरप्रतिमं लकुटपाणेः।। ஜயதி த்⁴ருʼதசந்த்³ரரேக²ம்ʼ விபுலாமததாரகாஶுப⁴ம்ʼ லோகே|  க³க³னமிவ ஸுப்ரஸன்னம்ʼ வபுரப்ரதிமம்ʼ லகுடபாணே:|| தண்டத்தைத் தாங்கிய லகுலீசரின் ஒப்பற்ற வடிவம் வெல்கிறது. அது ஆகாயத்தைப் போன்றது. சந்திர கலையைச் சூடியது. பெரியவனும் எதிரானவனுமான தாரகனுக்கு எதிரானது.(பெரிய எண்ணற்ற விண்மீன்களை உடையது என்று ஆகாயத்திற்குச் சிலேடை) தெளிவானது. Reply Forward

தேர்

Image
  தேர் என்ற வாகனத்தை  குயவு, வையம், கொடிஞ்சி, சயந்தனம் , திகிரி, யந்திரம் , கவரி, அரி, இரதம், கூவிரம் என்ற மற்ற பெயர்களால் அழைத்தனர். தேர் உருளிக்கு 8 வெவ்வெறு பெயர்கள் இருந்தன.  சிறந்த தேர் என்பது 120 அடி உயரமும் 72 அடி அகலமும் கொண்டிருப்பது.  மேலும்  66, 60, 54, 48, 42, 36  அடிகள் அகலமுடைய ஆறு வகை தேர்கள் உண்டு . கடவுளுக்கு உரிய இறைவன் தேர் விழாவுக்கு உரிய விழா தேர் போரிடுவதற்கு உரிய பொரு தேர் இடம் விட்டு செல்லும் இயங்கு தேர் பகைவர்களின் இடங்களை அழிக்கும் பகை அழி தேர் பல்படை பயிற்சி தரும் பயிற்சி தேர் என்று பல வகை தேர்கள் இருந்தன. மேலும் 1000 வீரர்களுக்கு உரிய படைத்தலைவர் ஒரு குதிரை பூட்டப்பட்ட தேரிலும் பதினாயிரம் வீரர்களுக்கு  உரிய படைத்தலைவர் இரு குதிரை பூட்டப்பட்ட தேரிலும் ஐம்பதாயிரம் வீரர்களுக்கு  உரிய படைத்தலைவர் நான்கு குதிரை பூட்டப்பட்ட தேரிலும் செல்லத் தகுதி உடையவர்கள் என்பர். - மேஜர் டாக்டர். கந்தசாமி

அதியமான் பெருவழி கற்கள்

Image
  அதியமான் பெருவழி கற்கள் தகடூர் (தருமபுரி) பகுதியில் அதியமான் காலத்தில் மக்களால் பயன்படுத்தப்பட்ட சாலையாகக் கருதப்படும் அதியமான் பெரு வழியில் அமைந்துள்ள காதக் கற்கள் இரண்டு உள்ளன.தற்போது பைபாஸ் சாலையில்  பதிகால் பள்ளம் என்ற இடத்தில் ஒரு காதக் கல்லும்(தற்போது இது தருமபுரி அகழ்  வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது) மாட்லாம்பட்டியின் அருகே கெங்கு செட்டிப் பட்டியில்  கிணற்றின் அருகே ஒரு காதக் கல்லும் உள்ளன.பதிகால் பள்ளம் காதக் கல்லில் "அதியமான் பெருவழி  நாவற் தாவளத்திற்கு 29 காதம் என்று கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளதுடன் படிக்காதவர்கள் அறிந்து கொள்ள இருபது காதத்தை குறிக்க(10+10) இரண்டு பெரிய குழிகளும் ஒன்பது காதத்தைக் குறிக்க ஒன்பது சிறிய குழிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. கெங்குசெட்டிப்பட்டி காதக் கல்லிலும்  "அதியமான் பெருவழி.நாவற்தாவளத்திற்கு 27 காதம்" என்ற கல்வெட்டுடன் 2பெரிய குழிகளும் 7 சிறிய குழிகளும் செதுக்கப்பட்டுள்ளன. 1 காதம்=10 கி.மீ அல்லது 6.25 மைல் என்று கணக்கிட்டால் இரண்டு காதக் கற்களுக்கு இடையே தற்போது உள்ள தொலைவு சற்றே முரண்படுகிறது.நான் கள பயணத்தின் போது கணக்கிட்ட அளவில

சாதகப்பறவையுடன் கற்பூரமஞ்சரி

Image
  ‘சாதகப்பறவையுடன் கற்பூரமஞ்சரி’ குளித்தபின் இளம்பெண்ணின் கூந்தலிலிருந்து விழும் நீர்த்திவலையை, சொட்டும் மழைநீர் என்று எண்ணி பருகும் சாதகப்பறவை. (சாதகப்பறவை: மேகத்திலிருந்து விழும் தூய அப்பழுக்கற்ற மழைநீரை மட்டுமே விரும்பும்) ராணி-கி-வாவ், பதான், குஜராத் மாநிலம் காலம்: சாளுக்கிய மன்னர் முதலாம் பீமதேவனின் (பொ.யு.1022–1064) ராணி உதயமதியால் கட்டப்பட்டது.