அதியமான் பெருவழி கற்கள்

 அதியமான் பெருவழி கற்கள்



தகடூர் (தருமபுரி) பகுதியில் அதியமான் காலத்தில் மக்களால் பயன்படுத்தப்பட்ட
சாலையாகக் கருதப்படும் அதியமான்
பெரு வழியில் அமைந்துள்ள காதக் கற்கள் இரண்டு உள்ளன.தற்போது பைபாஸ் சாலையில்  பதிகால் பள்ளம்
என்ற இடத்தில் ஒரு காதக் கல்லும்(தற்போது இது தருமபுரி அகழ் 
வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது)
மாட்லாம்பட்டியின் அருகே கெங்கு செட்டிப் பட்டியில்  கிணற்றின் அருகே
ஒரு காதக் கல்லும் உள்ளன.பதிகால்
பள்ளம் காதக் கல்லில் "அதியமான் பெருவழி  நாவற் தாவளத்திற்கு 29 காதம்
என்று கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளதுடன் படிக்காதவர்கள் அறிந்து கொள்ள இருபது காதத்தை குறிக்க(10+10) இரண்டு பெரிய குழிகளும் ஒன்பது காதத்தைக் குறிக்க ஒன்பது சிறிய குழிகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
கெங்குசெட்டிப்பட்டி காதக் கல்லிலும் 
"அதியமான் பெருவழி.நாவற்தாவளத்திற்கு 27 காதம்"
என்ற கல்வெட்டுடன் 2பெரிய குழிகளும்
7 சிறிய குழிகளும் செதுக்கப்பட்டுள்ளன.
1 காதம்=10 கி.மீ அல்லது 6.25 மைல் என்று கணக்கிட்டால் இரண்டு காதக் கற்களுக்கு இடையே தற்போது உள்ள தொலைவு சற்றே முரண்படுகிறது.நான் கள பயணத்தின் போது கணக்கிட்ட அளவில் ஒரு காதம் என்பது 4 அல்லது
5 மைல் தொலைவு என்றே வருகிறது.
6 விரல்=1
2 சாண்=1முழம்
2முழம்=1கோல்
4 கோல்=1 தண்டம்
500 தண்டம்=1 கூப்பிடு தூரம்.
4கூப்பிடு தூரம்=1காதம்
4காதம்=1 யோசனை
இந்த அளவீட்டின் படி
1 காதம்=6705.60 மீட்டர்கள்=6.706 கி.மீ=
4.191 மைல்கள்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு