தேர்
தேர் என்ற வாகனத்தை குயவு, வையம், கொடிஞ்சி, சயந்தனம் , திகிரி, யந்திரம் , கவரி, அரி, இரதம், கூவிரம் என்ற மற்ற பெயர்களால் அழைத்தனர். தேர் உருளிக்கு 8 வெவ்வெறு பெயர்கள் இருந்தன. சிறந்த தேர் என்பது 120 அடி உயரமும் 72 அடி அகலமும் கொண்டிருப்பது. மேலும் 66, 60, 54, 48, 42, 36 அடிகள் அகலமுடைய ஆறு வகை தேர்கள் உண்டு .
கடவுளுக்கு உரிய இறைவன் தேர்
விழாவுக்கு உரிய விழா தேர்
போரிடுவதற்கு உரிய பொரு தேர்
இடம் விட்டு செல்லும் இயங்கு தேர்
பகைவர்களின் இடங்களை அழிக்கும் பகை அழி தேர்
பல்படை பயிற்சி தரும் பயிற்சி தேர்
என்று பல வகை தேர்கள் இருந்தன.
மேலும் 1000 வீரர்களுக்கு உரிய படைத்தலைவர் ஒரு குதிரை பூட்டப்பட்ட தேரிலும்
பதினாயிரம் வீரர்களுக்கு உரிய படைத்தலைவர் இரு குதிரை பூட்டப்பட்ட தேரிலும்
ஐம்பதாயிரம் வீரர்களுக்கு உரிய படைத்தலைவர் நான்கு குதிரை பூட்டப்பட்ட தேரிலும்
செல்லத் தகுதி உடையவர்கள் என்பர்.
- மேஜர் டாக்டர். கந்தசாமி
Comments
Post a Comment