கரிகாலனின் வழிவந்தவர்கள்

 


ஆறாம் நூற்றாண்டிலிருந்து கர்னூலை ஒட்டியப் பகுதியில் தெலுகு சோழர்கள் ஆண்டுவந்தனர். இவர்கள் கரிகாலனின் வழிவந்ததாகக் கூறிக் கொள்கின்றனர். சீன யாத்ரிகனான யுவான் ஸாங் இவர்களைத்தான் சுளியா என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களில் குறிப்பிடத்தக்க வேந்தர்களில் ஒருவன் புண்யகுமாரன். இவன் எட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவன். இவன் வெளியிட்ட தொம்மர நந்த்யால செப்பேட்டின் காப்புச் செய்யுள் லகுலீசரைத் தொழுகிறது.


जयति धृतचन्द्ररेखं
विपुलामततारकाशुभं लोके।
गगनमिव सुप्रसन्नं
वपुरप्रतिमं लकुटपाणेः।।
ஜயதி த்⁴ருʼதசந்த்³ரரேக²ம்ʼ
விபுலாமததாரகாஶுப⁴ம்ʼ லோகே| 
க³க³னமிவ ஸுப்ரஸன்னம்ʼ
வபுரப்ரதிமம்ʼ லகுடபாணே:||

தண்டத்தைத் தாங்கிய லகுலீசரின் ஒப்பற்ற வடிவம் வெல்கிறது. அது ஆகாயத்தைப் போன்றது. சந்திர கலையைச் சூடியது. பெரியவனும் எதிரானவனுமான தாரகனுக்கு எதிரானது.(பெரிய எண்ணற்ற விண்மீன்களை உடையது என்று ஆகாயத்திற்குச் சிலேடை) தெளிவானது.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி