Posts

Showing posts from November, 2022

விஜயாவும் தண்டியும்

Image
  விஜயாவும் தண்டியும் மேலைச் சாளுக்ய பேரரசன் இரண்டாம் புலகேசி வீழ்ந்ததன் பிறகு நிலைகுலைந்த வாதாபியில்  சந்த்ராதித்யனுக்குப் பிறகு அவனுடைய குழந்தையின் சார்பில் ஆட்சி செய்தவள் விஜயா  பட்டாரிகா. இவளுடைய ஆட்சிக் காலத்திற்குப் பிறகும் முதலாம் விக்ரமாதித்யனால் தன்  அண்ணனின் ப்ரிய மஹிஷி என்று குறிப்பிடப்பெற்றவள். அவன் குறிப்பிடும் விதத்தை வைத்து  இவள் பேரழகியாக இருந்திருக்கலாமென்று தெரிகிறது. விஜ்ஜிகா  என்று கன்னடத்திலும்  விஜயாங்கா என்று வடமொழியிலும் வழங்கப்பெற்ற இவள் மிகச் சிறந்த கவிதாயினி.  காளிதாஸனுக்குப் பிறகு வைதர்பீ ரீதியில் எழிலுற யாக்கும் திறன் கைவரப்பெற்ற ஒரே  கவிஞர் என்று ராஜசேகரரால் கொண்டாடப்பெற்றவள். அவள் தண்டியைப் பற்றி கூறியதாக  ஒரு கவிதை உண்டு. नीलोत्पलदलश्यामां विज्जिकां मामजानता ।  वृथैव दण्डिना प्रोक्तं सर्वशुक्ला सरस्वती ॥  நீலோத்பலதலஶ்யாமாம்  விஜ்ஜிகாம் மாமஜானதா |   வ்ருதைவ தண்டினா ப்ரோக்தம்  ஸர்வஶுக்லா ஸரஸ்வதீ || தண்டி தன்னுடைய காப்புச் செய்யுளில் எல்லா வகையிலும் வெண்மையான  கலைமகளை வணங்கு...

முலைமகவு

Image
  முலைமகவு திருக்கோயிலூரில் உள்ள முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு ஒன்று அளப்பரிய செய்தியை உடையது. சுந்தர சோழன் இறந்த பின்னை வானவன் மாதேவி அவனோடு உடன்துறக்கம் புக்க செய்தியை மனமுருகும் வகையில் தருவது. அப்படி கூறும்போது செந்திரு மடந்தைமன் சீராஜ ராஜன் இந்திரசமானன் இராஜசர்வஞ்ஞனெனும் புலியைப் பயந்த பொன்மான் கலியைக் கரந்து கரவாக் காரிகை சுரந்த முலைமகப் பிரிந்து முழங்கெரி நடுவணும் தலைமகற் பிரியாத் தையல் நிலைபெறுந் தூண்டா விளக்கு........ ............மணிமுடி வளவன் சுந்தரசோழன் மந்தரதாரன் திருப்புய முயங்குந்தேவி' என்ற புலியைப் பயந்த பொன்மானான அவள் முலைமகப் பிரிந்து உடன்போகியதைத் தருகிறது. இதில் குறிப்பிடப்பட்ட முலைமகவு ராஜராஜனே என்றே துணிந்துள்ளனர்.  இதில் குறிப்பிடத்தக்க கருத்து யாதெனில் முலைப்பாலருந்தும் நிலையில் ராஜராஜன் இருந்திருந்தால் ஐந்து வயது வரை இருக்கலாம். அதன்பிறகு பதினைந்தாண்டுகள் உத்தம சோழன் ஆட்சி இருபத்தொன்பது ஆண்டுகள் ராஜராஜனின் ஆட்சி என்று நாற்பத்துநான்கு ஆண்டு களோடு சேர்த்தால் வெறும் ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே ராஜராஜன் உயிரோடிருந்ததாகக் கொள்ள வேண்டும். மேலும் பால் மணம் மாறா ...

ப்ருஹத் கதா மஞ்ஜரீ

Image
  பதினோராம் நூற்றாண்டில் க்ஷேமேந்த்ரர் இயற்றிய ப்ருஹத் கதா மஞ்ஜரீயிலிருந்து ஒரு கதை அழகிய இளம் மனைவியைத் தனியே விடுத்து அண்டை வீட்டு செல்வந்தனிடம் செலவுக்குப் பணமும் கொடுத்து தவமியற்ற சென்றான் கணவன். அவள் அழகில் மயங்கிய அமைச்சரின் மகன், காவல் அதிகாரி, ஊர்ப் பெரியவர் மூவரும் இச்சைக்கு இணக்கப் பார்த்தனர். அண்டை வீட்டு செல்வந்தரிடம் முறையிட்டு செலவுக்குப் பணம் கேட்டாள். அவனும் ஆசைக்கு இணங்கினால் பணம் என்றான். செய்வதறியாது திகைத்தாள். ஒரு முடிவெடுத்தாள். மூவரையும் தனித்தனியே பார்த்து இரவின் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் யாமங்களில் வரச்சொன்னாள். செல்வந்தனை வைகறையில் வரச்சொன்னாள்.  வீடு முழுவதும் இருட்டாக்கினாள். முதலாம் ஆள் வந்தவுடன் பேசிவிட்டு குளித்துவிட்டு வாருங்கள் என்றாள். உள்ளே தோழியர் உடலெல்லாம் வண்டிமையைப் பூசி அனுப்பினர். இரண்டாம் யாமத்தில் மற்றவன் வர கணவன் வந்து விட்டதாகக் கூறி பயமுறுத்தி ஏற்கனவே அமைத்திருந்த மரக் கூண்டில் தள்ளி பூட்டினாள். இதேதான் மற்றைய இருவருக்கும்.  வைகறையில் செல்வந்தன் வந்தான். வேண்டுமென்றே உரக்க பணம் தன்னுடையது என்றும் தன் வீட்டு பூதங்களே ஸாக...

பள்ளிப்படைகள்

Image
  சோழ நாட்டில் இருக்கும் பள்ளிப்படைகள் மொத்தம் ஆறு! அதாவது நேரடியாக பள்ளிப்படை என்ற சொல் குறிப்பிட்டது அதில் 5, இரண்டாம் ராஜராஜனின் பள்ளிப்படையான ராஜகம்பீர ஈஸ்வரம் மற்றும் அவரின் மனைவிகள் நால்வரின் பள்ளிப்படைகளும் ஆகும்! ஆனால் இவை ஐந்தும் தற்போது அழிந்து விட்டது! ஆனால் மற்றொரு பள்ளிப்படை இன்னும் சோணாட்டில் உள்ளது! அது தான் மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழரின் மனைவியான பஞ்சவன் மாதேவியாரின் பள்ளிப்படை ஆகும்! இப்பள்ளிப்படை சோழர் கோநகர் பழையாறையில் உள்ளது! இப்போது அக்கோயில் பட்டீஸ்வரம் என்ற சிற்றூரில் உள்ளது! கல்வெட்டில், " பழையாறையான முடிக்கொண்ட சோழபுரத்து பள்ளிப்படை பஞ்சவன் மாதீஸ்வரம் " என்று வருகிறது! ராஜராஜர் காலம் வரை பழையாறை என்றழைக்க பட்ட ஊர், ராஜேந்திரர் காலத்தில் முடிக்கொண்ட சோழபுரம் என்றழைக்கபட்டது!

சிதம்பரம் - ஸ்ரீ ஸரஸ்வதி பண்டாரம்

Image
  சிதம்பரம் கோவில் நூலகக் கல்வெட்டுகள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. நடராஜா கோயில் கல்வெட்டுகள், கோயில் வளாகத்தில் உள்ள கையெழுத்துப் பிரதிகளின் நூலகத்தைக் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேதியிட்ட இரண்டு கல்வெட்டுகள் பழைய கோயில் நூலகத்தை மறுசீரமைப்பதைக் குறிப்பிடுகின்றன. ஹார்ட்மட் ஷார்ஃப் கருத்துப்படி, குறிப்பிடப்பட்ட பழைய நூலகம் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருக்கலாம். கோவிலில் இருபது நூலகர்கள் பணியமர்த்தப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. அதில் எட்டுப் பழைய கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்து புதிய பதிப்புகளை உருவாக்கினர்; இருவர் அந்த நகல் அசலுக்குப் பொருந்தியதைச் சரிபார்த்து, நான்கு கையெழுத்துப் பிரதிகளை முறையாகச் சேமிப்பதை நிர்வகித்தனர். தென்னார்காடு மாவட்டம் சிதம்பரம் நடராசர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு வடக்கே வட கோபுரத்திற்கு அருகே உள்ள மண்டபத்தில் உள்ள 6 வரி சிதைந்த கல்வெட்டு. 1. ஸ்வஸ்தி ஸ்ரீ ஸரஸ்வதி பண்டாரத்துக்கு பல க்ரந்தங்கள் பார்க்கவும் எழுதவும் அ...