ப்ருஹத் கதா மஞ்ஜரீ
பதினோராம் நூற்றாண்டில் க்ஷேமேந்த்ரர் இயற்றிய
ப்ருஹத் கதா மஞ்ஜரீயிலிருந்து ஒரு கதை
அழகிய இளம் மனைவியைத் தனியே விடுத்து அண்டை வீட்டு செல்வந்தனிடம் செலவுக்குப் பணமும் கொடுத்து தவமியற்ற சென்றான் கணவன். அவள் அழகில் மயங்கிய அமைச்சரின் மகன், காவல் அதிகாரி, ஊர்ப் பெரியவர் மூவரும் இச்சைக்கு இணக்கப் பார்த்தனர். அண்டை வீட்டு செல்வந்தரிடம் முறையிட்டு செலவுக்குப் பணம் கேட்டாள். அவனும் ஆசைக்கு இணங்கினால் பணம் என்றான். செய்வதறியாது திகைத்தாள். ஒரு முடிவெடுத்தாள்.
மூவரையும் தனித்தனியே பார்த்து இரவின் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் யாமங்களில் வரச்சொன்னாள். செல்வந்தனை வைகறையில் வரச்சொன்னாள்.
வீடு முழுவதும் இருட்டாக்கினாள். முதலாம் ஆள் வந்தவுடன் பேசிவிட்டு குளித்துவிட்டு வாருங்கள் என்றாள். உள்ளே தோழியர் உடலெல்லாம் வண்டிமையைப் பூசி அனுப்பினர். இரண்டாம் யாமத்தில் மற்றவன் வர கணவன் வந்து விட்டதாகக் கூறி பயமுறுத்தி ஏற்கனவே அமைத்திருந்த மரக் கூண்டில் தள்ளி பூட்டினாள். இதேதான் மற்றைய இருவருக்கும்.
வைகறையில் செல்வந்தன் வந்தான். வேண்டுமென்றே உரக்க பணம் தன்னுடையது என்றும் தன் வீட்டு பூதங்களே ஸாக்ஷி என்றும் அரற்றினாள். பிறகு அவனுக்கும் வண்டிமையைப் பூசி தலகாணிகளை அடுக்கி கணவனாகக் காட்டி வெளியே துரத்தினாள். நாய்கள் துரத்த நொந்து வீடு சேர்ந்தான்.
மறுநாள் அரசவைக்கு சென்று செல்வந்தன் பணம் தராமல் ஏமாற்றுவதாக முறையிட்டாள். செல்வந்தனை அழைக்க அவன் மறுத்தான். தன் வீட்டில் மரக் கூண்டுகளில் தான் வளர்த்து வரும் பூதங்களே ஸாக்ஷி என்றாள். மரக் கூண்டுகளைக் கொணர்வித்தாள். பூதங்களே ஸாக்ஷி கூறாவிட்டால் மரக்கூண்டோடு எரித்து விடுவேன் என்றாள். அவர்கள் மூவரும் உண்மை என்றனர்.
அரசன் வியந்து கேட்க எல்லாவற்றையும் கூறினாள். நால்வரையும் தண்டித்து அவளை உடன்பிறந்தாளாகப் பாதுகாத்தான் மன்னவன்.
கதை எப்படியிருந்தாலும் அன்றைய ஸமூஹ சூழ்நிலை ஓரளவு புலப்படுகிறதல்லவா?
ReplyForward |
Comments
Post a Comment