பள்ளிப்படைகள்
சோழ நாட்டில் இருக்கும் பள்ளிப்படைகள் மொத்தம் ஆறு!
அதாவது நேரடியாக பள்ளிப்படை என்ற சொல் குறிப்பிட்டது
அதில் 5, இரண்டாம் ராஜராஜனின் பள்ளிப்படையான ராஜகம்பீர ஈஸ்வரம் மற்றும் அவரின் மனைவிகள் நால்வரின் பள்ளிப்படைகளும் ஆகும்! ஆனால் இவை ஐந்தும் தற்போது அழிந்து விட்டது!
ஆனால் மற்றொரு பள்ளிப்படை இன்னும் சோணாட்டில் உள்ளது! அது தான் மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழரின் மனைவியான பஞ்சவன் மாதேவியாரின் பள்ளிப்படை ஆகும்!
இப்பள்ளிப்படை சோழர் கோநகர் பழையாறையில் உள்ளது! இப்போது அக்கோயில் பட்டீஸ்வரம் என்ற சிற்றூரில் உள்ளது!
கல்வெட்டில்,
" பழையாறையான முடிக்கொண்ட சோழபுரத்து பள்ளிப்படை பஞ்சவன் மாதீஸ்வரம் "
என்று வருகிறது!
ராஜராஜர் காலம் வரை பழையாறை என்றழைக்க பட்ட ஊர், ராஜேந்திரர் காலத்தில் முடிக்கொண்ட சோழபுரம் என்றழைக்கபட்டது!
Comments
Post a Comment