Posts

திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் கோயில்

Image
      திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் கோயில்  வரலாறு முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன், பேராசிரியர்      வரலாற்றுத்துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம். கோயில் அமைவிடம்      கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் திருச்சோபுரம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஊர் அமைந்துள்ளது. இவ்வூரின் நடு நாயகமாக மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு       கி.பி. 1070 முதல் 1120 வரை கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழனின் பட்டத்தரசிகளுள் ஒருவராகிய தியாகவல்லி அம்மையாரால் திருப்பணி செய்யப்பட்ட பெருமைக்குரியது இக்கோயில். சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஏரளாமான நிலதானங்களை மங்களபுரீஸ்வரர் கோயிலுக்கு வழங்கியுள்ளதை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் இக்கோயில் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. இறைவன் – இறைவி      மூலவர் – மங்க...

திருத்தினை நகர்

Image
தமிழ் இந்து - வில் . திருத்தினை நகர்  என்கிற  தீர்த்தனகிரி.......முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன்.

கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்

Image
கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்  மேற்கொண்டு வரும் முதலாம் இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்களின்  தடங்காணும் பயணம்.....இரண்டாம் பாகம்  தமிழ் இந்து நாளிதழில்...

திருத்தினைநகர்

Image
  திருப்பம் தரும் திருத்தினைநகர்              முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன்                 உலக மக்கள் வேற்றுமையின்றி பரந்த மனப்பான்மையோடு  வாழ வேண்டுமே ஆனால் அது ஆன்மிகத்தால் மட்டுமே முடியும் என்பதை  உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். குறிப்பாக தமிழகத்தில் தோன்றிய  சமய பெரியோர்கள் அனைவருமே மக்களுக்கு செய்யும் தொண்டை மகேசனுக்கு செய்யும் தொண்டாகும் என்று கூறி மக்களை நல்வழிபடுத்தி வந்தனர். மேலும் மனித உள்ளத்தில் இருக்கும்  தான் என்ற அகங்காரத்தை  நீக்கி அன்பியல் உணர்வு வளர்க்கப்பட்டால்  தான் உலக மக்கள் அமைதியை பெறமுடியும். இதை போதிக்கும் இடம் கோயிலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்  உருவாக்கப் பட்டவைகள் தான்  கோயில்களாகும். திருத்தினைநகர் அமைவிடம்      இவ்வூர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் கடலூர்  to சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்...

பெண்மை போற்றும் உருப்பிடி அம்மன்

Image
பெண்மை போற்றும் உருப்பிடி அம்மன் முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் , உதவிப் பேராசிரியர் , வரலாற்றுத்துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.              கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் இருந்து  வடக்கே 6 கி.மீ. தூரத்தில் சந்தவெளிப்பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தின் தெற்குப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகள் பழைமையான உருப்பிடி அம்மன் கோயில் அமைந்துள்ளது. உருப்பிடியம்மன் வரலாறு       இயற்கையான புதர்கள், வயல்களால் சூழப்பட்ட பகுதியில் வடக்கு நோக்கி வாறு உருப்பிடியம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை வெற்றிக்களிந்த வீரமுண்டனார் பரம்பரையை சார்ந்தவர்கள் இப் பகுதியின் பரம்பரையாக வருவாய் மண்டலத் தலைவர்களாக இருந்து வந்தனர். இவர்கள் சோழப் பேரரசின் கீழ் செயல்பட்டவர்கள்.    இவர்கள் சந்தவெளிப்பேட்டையின் வடக்குப்பகுதியில் கோட்டை மற்றும் அரண்மனையும் அமைத்து  வாழ்ந்து வந்தனார் மேலும் அரண்மனையை சுற்றி கோட்டை சுவரும் அதை சுற்றி அகழியும்...

முதலாம் இராஜராஜனின் கலியூர் கன்னடக் கல்வெட்டு

Image
                            முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன்          முதலாம் இராஜராஜனின் கலியூர் கன்னடக் கல்வெட்டு                  நேற்று தமிழ் ஆர்ட்ஸ் அகாடெமி சார்பில் முனைவர் நாகசாமியின் அடுக்ககத்தின் வண்டிகள் நிறுத்திமிடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தியத் தொல்லியல் நிறுவனத்திலிருந்து இரு நாள்களுக்கு முன் ஓய்வுபெற்றிருந்த முனைவர் வெங்கடேசன் , கர்நாடகப் பகுதியில் தான் கண்டுபிடித்த சோழக் கல்வெட்டு ஒன்றைக் குறித்துப் பேசினார். இந்தியத் தொல்லியல் துறையின் முனைவர் வெங்கடேசன் கர்நாடகப் பகுதியின் வரலாற்றைக் குறிப்பிட்டு , அங்கு ஆட்சி செய்த வெவ்வேறு அரச வம்சங்களையும் அவர்களது கோயில் கட்டுமானங்களையும் படங்களாக வேகமாக காட்டிச் சென்றார். பிறகு முக்கியமான பகுதிக்கு வந்தார். ராஜராஜனது மெய்க்கீர்த்தியில் இவ்வாறு வரும்: ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்க...