Posts

Showing posts from May, 2015

கீழுர் பாளையத்தின் வாரிசுகள் மற்றும் இராஜவாள்

Image
கடலூர் மாவட்டம் வடலூர்  அருகே  உள்ள  பாச்சாரப்பாளையம் கி.பி.  1772 ஆம்  ஆண்டில்  புகழ்பெற்ற பாளையமாக  திகழ்ந்தது.  தற்பொழுது கீழுர் கிராமத்தில்  வாழ்ந்துவரும்  பாளையத்தின்  வாரிசுகளால் பாதுகாக்கப்பட்டு  வரும்  போர்வாள் .

திருவதிகை பெருமாள் கோயில் மடம் - கல்வெட்டு

Image
முனைவர் J.R.சிவராமகிருஷ்ணன்...திருவதிகை பெருமாள் கோயில் மடம்  கல்வெட்டு ௳ ஸ்ரீராமஜெயம் வரி 1 கலியுகாதி ௵ ௪௯௯௮ சாலிவாகன ௵ ௧௮௧௯ வரி 2 இங்கிலீஷ் ௧௮௯௭ ௵ நிகழும் ஏவிளம்பி ௵ வரி 3 வைகாசி ௴ ௧௨ யில் ஆரம்பித்து உலகின் கண்ணுள்ள வரி 4 ஆன்மாக்கள் உஜ்ஜீவிக்க வெழுந்த இரக்ஷகராகும் வரி 5 சருவதி ஸ்ரீ அரங்கநாதஸ்வாமி ஸந்நிதியில் விசேஷ வரி 6 கைங்கரியஞ் செய்த இலிங்க ரெட்டிப் பாளயம் நன் வரி 7 முத்துப் பெருமாள் செட்டியார் குமாரர் இராமசுவாமி வரி 8 செட்டியாரும் அவர் தம்பி ந..கோவிந்த செட்டியார் குமாரர் வரி 9 இளைய பெருமாள் செட்டியாரும் ௸ ஸ்ரீ சக்கரவர்த்தி ( ஸ்ரீ ) வரி 10 மகன் சந்நிதிக்கு வடமேற்கில் மூன்று திருமாளிகை வரி 11 முடித்தனா .. ள் ௸ திருமாளிகை மூன்றிலும் வரி 12 ௸ சந்நிதியிற் கைங்கிரியம் செய்யும் பிராமணாள் வரி 13 குடியிருக்கலாம்

சுடுமண் உறைகேணி

Image

பண்டைய தமிழக செங்கற்களின் அளவுகள்

Image
1.காவேரிப்பூம்பட்டினம் – 36.25 x 18.75 x 7.5 & 23.75x12.5x5 cm- காலம் கி.பி. 1 – 2 . 2.கொற்கை – 45 x 29 x 7.5 cm – காலம் கி.மு. 786 3. கருவூர் – 47 x 32 9 cm – காலம் கி.மு . 2 – 1 4 . குடிகாடு – 35 x 22 x 6 cm – காலம் கி.மு. 1 – கி.பி. 2 5. வல்லம் – 22 x 12 x 6 cm – காலம் கி.மு. 1 – கி.பி. 5 6.பழையாறை – 24 x 12 x 4 cm – காலம் – இடைக்காலத்தை சார்ந்தது. 7. தாராசுரம் – 27 x 17 x 7 & 21 x 13 x 5 cm – காலம் கி.பி. 12 கடலூர் மாவட்டம்.... 1 பத்திரக்கோட்டை – 42 x 21 x 7 cm – காலம் கி.மு. 2 கி.பி. 1 2. விளாகம் – 24 x 16 x 4 cm – காலம் கி.பி. 12 – 13 3. தர்மநல்லூர் – 42 x 21 x 7 cm – காலம் கி.மு. 2 4. மருங்கூர் – 42 x 24 x 7 & 35 x 20 x 7 & 20 x 20 x 7 cm – காலம் கி.மு. 3 – 2 5. தியாகவல்லி – கேணி – 25 x 15 – 20 x 5 cm - காலம் கி.பி. 12 6. வடக்கு கஞ்சன்கொல்லை – 24 x 12 x 4 cm – காலம் கி.பி. 12 – 13 7. பாலூர் – 40 x 28 x 6 & 42 x 27 x 8 & 42 x 30 x 7 cm – காலம் கி.மு.2-கி.பி. 1  8. வடலூர் – 40 x 21

மேற்கு ஆசியாவை சார்ந்த மட்கல ஓடுகளா...?

Image
பச்சை   மற்றும்  நீல நிற  கண்ணாடிக் கலவை  பூசப்பட்ட  மேற்கு  ஆசியாவை  சார்ந்த மட்கல  ஓடுகளா...? கடலூர் மாவட்டதில்  உள்ள  ஆண்டர்முள்ளிப்பள்ளம் , பெரியப்படு , சிலம்பிமங்கலம் , மணிகொல்லை , அன்னப்பன் பேட்டை, தியாகவல்லி , திருச்சோபுரம்  போன்ற ஊர்களில்   நடத்தப்பட்ட   தொல்லியல் கள ஆய்வில்  கண்டறியப்பட்டுள்ளன......(PARTHIAN , SASANIAN ,EGYPTIAN ? GREEN GLAZED POTTERY )இவைகளின்  காலம்  கி.பி. 5 - 7 ஆம் நூற்றாண்டாகும். ஆனால் இது சீனா நாட்டை சார்ந்ததா, இல்லை மணிக்கொல்லை பகுதியில் தயாரிக்கப்பட்டதா...?

SASANIAN PALE GREEN GLASS BOWL....

Image
BEAUTIFUL AND MINT  SASANIAN PALE GREEN GLASS BOWL....

SASANIAN IRAN . GLASS BLOWN AND WHEEL - CUT.

Image
IRAN , 500 - 1000 AD . FACETED BOWL . 5 th - 7th  CENTURY ; SASANIAN IRAN . GLASS BLOWN  AND  WHEEL - CUT.

பெருமாள் ஏரி

Image
பெருமாள் ஏரி       கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் அமைந்துள்ள பெருமாள் ஏரியை சேந்தமங்கலத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த பிற்கால பல்லவ பரம்பரையில் வந்த இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1243 – 1279)இவ்வேரியை  வெட்டுவித்த செய்தியை இம்மன்னன் காலத்தில் வெளிடப்பட்ட திருவண்ணாமலைக்கோயில் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.   ‘’ . . . . நெடுங்கரை வென்று மலை கொண்ட பெருமாளேரியுஞ் சுரர்தரு நெருங்கிய சோலையும். . . . ‘’ என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது. ஏரியின் தற்போதைய கொள்ளளவு    ஏரியின் மொத்த பரப்பளவு - 3,457 ஏக்கர். ஏரியின் தண்ணீர் புல்டேங் லெவல் - 5.44 மீட்டர். ஏரியின் தண்ணீர் புல்டேங் லெவல் அளவு மேல் - 6.87 மீட்டர் மொத்தம் 11 மதகுகளை கொண்ட ஏரியின் மொத்த தண்ணீரின் கொள்ளளவு - 574 மில்லியன் இந்த ஏரியின் மூலம் பயன்பெரும் மொத்த ஆயக்கட்டு அதாவது , நிலப்பரப்பளவு - 6,581.92 ஏக்கர். சிறு , குழு விவசாயிகள் இந்த பெருமாள் ஏரியின் தண்ணீர் மூலம் ஏழு கிராமம் மக்கள் பயன் பெறுக்கின்றனர். 6,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பெருமாள் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.