பெருமாள் ஏரி

பெருமாள் ஏரி

      கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் அமைந்துள்ள பெருமாள் ஏரியை சேந்தமங்கலத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த பிற்கால பல்லவ பரம்பரையில் வந்த இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1243 – 1279)இவ்வேரியை  வெட்டுவித்த செய்தியை இம்மன்னன் காலத்தில் வெளிடப்பட்ட திருவண்ணாமலைக்கோயில் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.
  ‘’ . . . . நெடுங்கரை வென்று மலை கொண்ட பெருமாளேரியுஞ் சுரர்தரு நெருங்கிய சோலையும். . . . ‘’ என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.

ஏரியின் தற்போதைய கொள்ளளவு 


  ஏரியின் மொத்த பரப்பளவு - 3,457 ஏக்கர். ஏரியின் தண்ணீர் புல்டேங் லெவல் - 5.44 மீட்டர்.
ஏரியின் தண்ணீர் புல்டேங் லெவல் அளவு மேல் - 6.87 மீட்டர்
மொத்தம் 11 மதகுகளை கொண்ட ஏரியின் மொத்த தண்ணீரின் கொள்ளளவு - 574 மில்லியன்
இந்த ஏரியின் மூலம் பயன்பெரும் மொத்த ஆயக்கட்டு அதாவது, நிலப்பரப்பளவு - 6,581.92 ஏக்கர்.
சிறு, குழு விவசாயிகள் இந்த பெருமாள் ஏரியின் தண்ணீர் மூலம் ஏழு கிராமம் மக்கள் பயன் பெறுக்கின்றனர்.

6,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பெருமாள் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு